Home
News

BSNL.. கப் சிப்னு ரீசார்ஜ்.. ரூ.225 போதும்.. 30 நாட்களுக்கு வாய்ஸ்.. 2.5 ஜிபி டேட்டா.. குஷியில் கஸ்டமர்கள்!

பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்கள் கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யும்படியான விலைக்கு ரூ.225 விலை கொண்ட திட்டம் கிடைக்கிறது. தினசரி டேட்டா அதிகமாக கிடைப்பதால் 4ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டமானது சில்வர் ஜூபிலி சலுகையில் கிடைப்பதால், இப்படி அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டதில் இருந்து, பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இலவச சிம் கார்டு முதல் 1 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டத்தை கொடுப்பது வரையில் கிடைத்தது. ஆனால், இந்த பிஎஸ்என்எல் ரூ.225 திட்டம் பெற்ற வரவேற்பை போல மற்ற திட்டங்கள் பெறவில்லை. ஏனென்றால், இதில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

BSNL.. கப் சிப்னு ரீசார்ஜ்.. ரூ.225 போதும்.. 30 நாட்களுக்கு வாய்ஸ்!

அதேபோல இந்த திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள் பிரத்யேகமாக கிடைக்கின்றன. ஆகவே, கிட்டத்தட்ட இதே விலைக்கு கிடைக்கும் மற்ற திட்டங்களில் சலுகைகள் குறைவாக இருக்கிறது. ஆகவே, மலிவான விலைக்கு அதிக டேட்டாவுடன் திட்டம் வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இது புதிய கஸ்டமர்களுக்கு மட்டுமல்லாமல், பழைய கஸ்டமர்களுக்கும் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 225 Prepaid Plan): இந்த பிஎஸ்என்எல் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். இதில் லம்ப்-சம் டேட்டா, லம்ப்-சம் எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கிடைக்காது. தினசரிக்கு மட்டுமே சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆகவே, நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா தொடர்ந்து கொடுக்கப்படும். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்கள் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருந்தால், அந்த வேகத்திலேயே 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் 30 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் வருகிறது.

எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) கால்கள் முதல் அன்லிமிடெட் எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் வரையில் செய்து கொள்ளலாம். இந்த மூன்று சலுகைகளையே இந்த திட்டம் கொடுக்கிறது. இந்த விலைக்கு 2.5 ஜிபி தினசரி டேட்டாவுடன் மற்ற நிறுவனங்களில் ப்ரீபெய்ட் திட்டங்கள் கிடையாது. ஆகவே, இது கஸ்டமர்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கிறது.

இதேபோல மற்றொரு சலுகை திட்டமாக பிஎஸ்என்எல் ரூ.625 எப்டிடிஎச் திட்டம் (BSNL Rs 625 FTTH Plan) கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு கிடைக்கும் சலுகைகள் மூக்கில் விரல் வைக்கும்படி இருக்கின்றன. ஏனென்றால், ஃபைபர் டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் கால்கள், ஓடிடி ஆப்களின் சந்தா மற்றும் லைவ் டிவி சேனல்களின் சந்தா கொடுக்கப்படுகிறது.

ஆகவே, ஒரே திட்டத்தில் மொபைல், டிவி, லேப்டாப் போன்ற டிவைஸ்களுக்கு டேட்டா கிடைக்கிறது. அதேபோல டிவிகளுக்கு லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்கள் கிடைக்கிறது. லேண்ட்லைன் கனெக்சன் இருந்தால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இந்த எப்டிடிஎச் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 2500 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும். இதை 70 எம்பிபிஎஸ் வேகத்தில் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 600 லைவ் டிவி சேனல்கள் மற்றும் 127 பிரீமியம் டிவி சேனல்களின் சலுகைகள் கிடைக்கிறது. மேலும், சோனிலிவ் (SonyLIV) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டமும் சலுகை விலைக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 225 Prepaid Plan 30 Days Validity Voice Calls Affordable Plan For 25 Years of BSNL
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X