Home
News

Jio, Airtel, Vi-க்கு முடியல சாமி.. ரூ.225 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2.5GB டேட்டா.. 30 நாட்கள் வேலிடிட்டி!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு 30 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அதிகப்படியான டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ் சலுகையை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைளை தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய சலுகைகளை கஸ்டமர்களுக்கு கொடுக்க தொடங்கி இருக்கிறது. இலவச சிம் கார்டு முதல் ரூ.1 விலைக்கு ரீசார்ஜ் வரையில் கொடுத்துள்ளது. இதில் சில்வர் ஜூபிலி திட்டமாக ரூ.225 விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் களமிறக்கப்பட்டது. இப்போது, கஸ்டமர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற திட்டமாக இது மாறிவிட்டது.

Jio, Airtel, Vi-க்கு முடியல சாமி.. ரூ.225 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஏனென்றால், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவுடன் இந்த விலைக்கு மற்ற நிறுவனங்களில் திட்டங்களே கிடையாது. ஆகவே, பிஎஸ்என்எல் மட்டுமே இந்த விலைக்கு கொடுத்து கஸ்டமர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. சொல்லப்போனால், பெரும்பாலான பகுதிகளில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டன. இதனால், இந்த திட்டம் கவனம் பெற்றுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ 225 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 225 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. மற்ற நிறுவனங்கள் பெரும்பாலும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை அதிகமாக கொடுக்கின்றன. ஆனால், பிஎஸ்என்எல் அதிகமாக 30 நாட்கள் வேலிட்டிடி கொண்ட திட்டங்களையே கொடுக்கிறது.

இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இதுபோக 2.5 ஜிபி டேட்டாவை தினமும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, 30 நாட்களுக்கு மொத்தமாக 75 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இந்த திட்டம் பிஎஸ்என்எஸ் 4ஜி சேவைகள் கிடைக்கும் பகுதியில் அதே வேகத்தில் டேட்டாவை கொடுக்கும். மேலும், 2.5 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. ஆகவே, வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களில் இது மலிவாக கிடைக்கிறது.

அதே நேரத்தில் மாதம் முழுவதும் வேலிடிட்டி கொடுத்து, கஸ்டமர்களை மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. இந்த திட்டம் ஸ்பெஷல் திட்டமாக இப்பதால், எப்போது வேண்டுமானாலும் சலுகைகள் மாற்றப்படலாம். ஆகவே, இதே விலைக்கு கிடைக்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். இது வழக்கமாக கிடைக்கும் திட்டமாக இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 228 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 228 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு மாதாந்திர வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, அதிகபட்சம் 31 நாட்கள் வரையில் வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். இது முந்தைய திட்டத்தைவிட அதிகமாகவும், ஆனால் டேட்டா சலுகை சற்று குறைவாக கிடைக்கிறது. அதாவது, இதில் 2 ஜிபி டேட்டா மட்டுமே வருகிறது.

இது முந்தைய திட்டத்தை விட 500 எம்பி குறைவாகும். மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு கிடைக்கிறது. மாத வேலிடிட்டியில் அதிக டேட்டா சலுகைகள் வேண்டுமானால், இந்த திட்டங்களில் ஏதாவது ஒன்றை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 225 Plan With Unlimited Voice Calls 30 Days Validity Check Silver Jubilee Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X