Home
News

Jio, Airtel-ஐ முடித்த BSNL.. ரூ.225-க்கு 2.5GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 30 நாட்கள் வேலிடிட்டி!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களானது, 1 ஜிபி டேட்டாவை கொடுக்கும் திட்டங்களுக்கு நிர்ணயிக்கும் விலையில் 2.5 ஜிபி டேட்டாவை கொடுப்பது மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி எஸ்எம்எஸ்களையும் பிஎஸ்என்எல் (BSNL) கொடுக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

மாதம் முழுவதும் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வேண்டுமானால், மற்ற டெலிகாம் நிறுவனங்களில் குறைந்தது, ரூ.350 விலைக்கும் மேல் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வெறும் ரூ.225 விலைக்கு கிடைக்கிறது. சொல்லப் போனால், ஒட்டுமொத்த டெலிகாம் மார்கெட்டிலேயே மலிவு விலையில் கிடைக்கும் 2.5 ஜிபி டேட்டா திட்டமாக இருக்கிறது.

Jio, Airtel-ஐ முடித்த BSNL.. ரூ.225-க்கு 2.5GB டேட்டா.. வாய்ஸ் கால்!

பிஎஸ்என்எல் ரூ.225 திட்ட விவரங்கள் (BSNL Rs 225 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு மற்ற நிறுவனங்களை போல 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படவில்லை. 30 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மாதம் முழுவதும் சிம் ஆக்டிவ் கிடைக்கும். இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டு இருக்கிறது. போஸ்ட் டேட்டா கூடுதலாக கிடைக்கும்.

அதாவது, நாளொன்றுக்கு ஒதுக்கப்பட்ட 2.5 ஜிபி டேட்டா முடிந்துவிட்டால், பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அடுத்த நாளில் மீண்டும் 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 75 ஜிபி டேட்டாவை மொத்தமாக பயன்படுத்தி இருக்க முடியும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவைக்கள் கிடைக்கும் பகுதிகளில் இருந்தால், அதே வேகத்தில் பயன்படுத்தலாம்.

ஆகவே, மலிவு விலைக்கு கிடைக்கும் 2.5 ஜிபிக்கான 4ஜி டேட்டா திட்டமாகவும் இது இருக்கிறது. மற்ற சலுகைகளில் எந்த மாற்றமும் கிடையாது. 30 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கிடைக்கும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் கஸ்டமர்களுக்கு கிடைக்கும்.

இதே சலுகைகளை மற்ற நிறுவனத்தில் எதிர்பார்க்க முடியாது. அதாவது, இந்த விலைக்கு எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில் 2.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை தனியார் நிறுவனங்கள் கொடுக்கின்றன. இது பிஎஸ்என்எல்லில் கிடைக்காது. ஆனால், 4ஜி ஸ்மார்ட்போன்களை மட்டுமே வைத்திருப்போருக்கு இந்த விலை வரவேற்க வேண்டியதாகும்.

அதேபோல மலிவான விலையில் திட்டங்களை தேடும் கஸ்டமர்களுக்கும் இது நல்ல ஆப்ஷனாக இருக்கும். இதைவிட கூடுதல் வேலிடிட்டி மற்றும் விலையும் குறைவாக இருக்க வேண்டுமானால், பிஎஸ்என்எல் ரூ.485 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 72 நாட்களுக்கு நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) கிடைக்கும் சலுகைகளை பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.485 திட்ட விவரங்கள் (BSNL Rs 485 Plan Details): அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை 72 நாட்கள் முழுவதும் கொடுக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இந்த திட்டங்களில் பட்ஜெட் மற்றும் டேட்டா தேவைக்கு ஏற்ப ஆப்ஷன்களை கஸ்டமர்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 225 Plan With Unlimited Voice Calls 2.5 GB Daily Data 30 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X