சுடச் சுட BSNL ரெடி.. ரூ.225-க்கு டெய்லி 2.5GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 30 நாட்கள் வேலிடிட்டி!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், மலிவான விலைக்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு தினசரி 2.5 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) வழங்குகிறது. இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் (New Prepaid Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என் ரூ 225 திட்ட விவரங்கள் (BSNL Rs 225 Plan Details): மலிவான விலைக்கு அதிக டேட்டா மற்றும் வேலிடிட்டி கொடுக்கும் திட்டமாக இருக்கிறது. ஏனென்றால், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா சலுகையை கொடுக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கிறது. இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஆகவே, மொத்தமாக 75 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும். மேலும், முக்கிய சலுகையான அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் கிடைக்கின்றன.
இந்த சலுகைகளையே இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. சொல்லப்போனால், உள்நாட்டு தொழில்நுட்பட்த்தில் உருவாக்கப்பட்ட பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை வெளியிட இருக்கிறார். இதற்கு முன்னதாக இந்த ரூ.225 திட்டம் களமிறங்கி இருக்கிறது. ஆகவே, 4ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இந்த திட்டம் வரவேற்பு பெற இருக்கிறது.
இதே பட்ஜெட்டில் மேலும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த திட்டங்கள் அதிக பிஎஸ்என்எஸ் கஸ்டமர்களால் ரீசார்ஜ் செய்யப்படுகின்றன. 28 நாட்கள் வேலிடிட்டி முதல் 1 மாத வேலிடிட்டிக்குள் இந்த திட்டங்கள் கிடைக்கின்றன. முதலாவது திட்டம் ரூ.199 விலைக்கு தொடங்குகிறது. இதன் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என் ரூ 199 திட்ட விவரங்கள் (BSNL Rs 199 Plan Details): இந்த திட்டத்தில் 2 ஜிபி டேட்டா தினசரிக்கு கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது. முந்தைய திட்டத்தில் பார்த்த 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் கிடைக்கின்றன. 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது.
பிஎஸ்என் ரூ 228 திட்ட விவரங்கள் (BSNL Rs 228 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் அல்லது 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்காது. அதைவிட கூடுதலாக காலண்டர் மாதாந்திர வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, எந்த தேதியில் ரீசார்ஜ் செய்கிறீர்களோ அடுத்த மாதம் அதே தேதி வரையில் இந்த திட்டத்தின் சலுகைகளை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
முந்தைய திட்டத்தை போலவே இதிலும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் மாதம் முழுவதும் செய்து கொள்ளலாம்.
பிஎஸ்என் ரூ 239 திட்ட விவரங்கள் (BSNL Rs 239 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு முந்தைய திட்டத்தில் கிடைத்த மொத்த சலுகையும் கிடைக்கிறது. ஆனால், கூடுதலாக டாக்டைம் வேல்யூ கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.10 மதிப்பில் டாக்டைம் வேல்யூ கிடைக்கும். மேலும், 2 ஜிபி தினசரி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வருகிறது.


Click it and Unblock the Notifications








