Home
News

2026 ஆரம்பமே BSNL ஆட்டம்.. ரூ.225 க்கு Jio, Airtel கதை முடிந்தது.. 3 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஜியோ, ஏர்டெல் கஸ்டமர்களையே மூக்கில் விரல் வைக்க செய்து வருகிறது. மாதத்துக்கு ரூ.225 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை கொடுப்பது போக நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை கொடுத்துள்ளது. இந்த திட்டத்தில் கிடைத்த டேட்டா சலுகை எந்த விலையும் உயர்த்தப்படாமலேயே அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களை போலவே பிஎஸ்என்எல் நிறுவனமும் இப்போது 4ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்துவிட்டது. இந்த 4ஜி அறிமுகத்தை தொடர்ந்து ரூ.225 விலையில் சில்வர் ஜூபிலி திட்டத்தை கொடுத்தது. இந்த விலைக்கு கிடைக்கும் சலுகைகள் மற்ற நிறுவனங்களில் கனவிலும் எதிர்பார்க்க முடியாது.

2026 ஆரம்பமே BSNL ஆட்டம்.. ரூ.225 க்கு Jio, Airtel கதை முடிந்தது!

பிஎஸ்என்எல் ரூ. 225 திட்ட விவரங்கள் (BSNL Rs 225 Plan Details): நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவுடன் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவாக உயர்த்தப்பட்டு கிடைக்கிறது. இந்த டேட்டா உயர்வு இருந்தும், திட்டத்தின் கட்டணத்தில் மாற்றம் இல்லை. அதே விலையில் தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

30 நாட்கள் வேலிடிட்டியை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். இந்த நாட்கள் முழுவதும் 3 ஜிபி டேட்டாவை தினமும் பயன்படுத்தலாம். ஆகவே, 60 ஜிபி டேட்டா கஸ்டமர்களுக்கு கிடைக்கும். மேலும், 3 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் இதில் 40 கேபிபிஎஸ் வேகத்தில் பேர் யூசேஜ் பாலிசி டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டா 4ஜி வேகத்தில் கொடுக்கப்படும்.

இந்த 3ஜி டேட்டா சலுகை போக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களையும் 30 நாட்கள் முழுவதும் செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் இந்த பிஎஸ்என்எல் ரூ. 225 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. ஜனவரி 31 ஆம் தேதி வரையில் மட்டுமே 2.5 ஜிபி டேட்டாவை 3 ஜிபியாக பெற்று கொள்ள முடியும்.

இந்த சலுகையை போலவே ஜனவரி 31 ஆம் தேதி வரையில் மற்றொரு சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகை பல முறை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இப்போதும், ஜனவரி 31 ஆம் தேதி வரையில் கிடைக்க உள்ளது. அதாவது, புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கும் டெலிகாம் கஸ்டமர்களுக்கு ரூ.1 விலை கொண்ட ரீசார்ஜ் திட்டம் கொடுக்கப்படுகிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மாதம் முழுவதும் கிடைக்கும். புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு இலமாக கிடைப்பதால், ரூ.1 இருந்தால் போதும் மாதம் முழுவதும் சலுகையை பயன்படுத்தலாம். இந்த திட்டத்தை பெறுவதற்கும் ஜனவரி 31 ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ. 1 திட்ட விவரங்கள் (BSNL Rs 1 Plan Details): 30 நாட்கள் வேலிடிட்டியை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொண்டுள்ளது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் இந்த வேலிடிட்டி நாட்களில் கிடைக்கும். மேலும், 2 ஜிபி டேட்டாவை 30 நாட்கள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். 60 ஜிபி டேட்டா மொத்தமாக கொடுக்கப்படுகிறது.

மேலும், 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் 2 ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு கொடுக்கப்படும். 100 எஸ்எம்எஸ் சலுகையும் நாளொன்றுக்கு கிடைக்கிறது. இப்படி 2026 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கொடுக்க முடியாத சலுகைகளுடன் ப்ரீபெய்ட் திட்டங்களை கொடுக்க தொடங்கி இருக்கிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 225 Plan Data Upgrades Offer Valid Till 31 Jan 2026 Now 3GB Data Per Day From 2.5GB
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X