ஜியோவை அடித்து தூக்கிய BSNL.. வெறும் 22 ரூபாயில் 90 நாள் வேலிடிட்டி.. குஷியில் இந்தியா..
மலிவு விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன்-ஐடியா (Vodafone-Idea) போன்ற டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் ரீசார்ஜ்ஜை தேடக்கூடாது. உண்மையை சொல்ல போனால் மிகவும் மலிவான திட்டத்தை பிஎஸ்என்எல் (BSNL) மட்டுமே வழங்குகிறது.
ஆம், பிஎஸ்என்எல் மட்டுமே இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், மலிவு விலையில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்தாலும், அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் வழங்கும் ரூ.22 விலை கொண்ட திட்டம் தான் இந்தியாவில் மிகவும் ஃபேமஸாக இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.22 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 22 Prepaid Plan):
இந்த திட்டம் ரூ.22 விலையில் 90 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்தியாவில் இந்த விலையில் 90 நாள் வேலிடிட்டியை வழங்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு வாய்ஸ் கால் அழைப்பு திட்டமாகும். உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளுக்கு இந்த திட்டத்தில் நிமிடத்திற்கு 30 பைசா வசூலிக்கப்படும்.
இந்த திட்டம் வெறும் 22 ரூபாயில் வருகிறது என்பதனால், இதில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் என்று எந்தவித கூடுதல் இலவச நன்மைகளையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா நன்மைகள் கொடுக்கப்படவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செல்லுபடியாகும் காலத்தை மட்டும் கருத்தில் கொள்பவராக இருந்தால், இந்த திட்டத்தை தாராளமாக ரீசார்ஜ் செய்யலாம்.
இந்த BSNL ரூ.22 திட்டத்தை நீங்கள் தேர்வு செய்வதற்கு முன்னால் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த மலிவு விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் எல்லா மாநிலங்களிலும் இல்லை. அப்படியானால், ரீசார்ஜ் செய்வதற்கு முன், அது எங்கு கிடைக்கிறது என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும். உங்கள் வட்டத்தில் கிடைக்கிறதா என்பதை சரி செய்து பார்த்த பிறகு ரீசார்ஜ் செய்துகொள்வதும்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ இடமிருந்து ரூ.25 விலைக்குள் கிடைக்கும் திட்டங்கள் என்னென்ன?
இந்த விலை புள்ளியில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா (Vi) போன்ற நிறுவனங்கள் என்னென்ன திட்டங்களை என்னென்ன நன்மைகளுடன் வழங்குகிறது என்று பார்க்கலாமா? முதலில் ஜியோ நிறுவனம் ரூ.25 விலையில் 4ஜி டேட்டா வவுச்சரை மட்டுமே வழங்குகிறது. இது டேட்டா பிளான் என்பதனால், இதன் வேலிடிட்டி உங்கள் அடிப்படை திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்துடன் ஒத்துப்போகிறது.
ஜியோ வழங்கும் மலிவு விலை திட்டத்தின் நன்மை:
இந்த திட்டம் உங்களுக்கு ரூ.25 விலையில் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த டேட்டா தீர்ந்த பிறகு உங்களுக்கு 64Kbps வேகத்தில் டேட்டா வழங்கப்படும். அடுத்தபடியாக, மலிவு விலை பிரிவில் ஏர்டெல் நிறுவனம் ரூ.19 ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இது ஒரு நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது இந்த விலையில் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதுவும் டேட்டா ஒன்லி திட்டமாகும்.
ஏர்டெல் வழங்கும் மலிவு விலை திட்டம்:
இது தவிர ஏர்டெல் நிறுவனம், 1 ரூபாய் கூடுதலுடன் மற்றோரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை ரூ.20 விலையில் வழங்குகிறது. ஏர்டெல்லின் இந்த ரூ.20 திட்டம் உங்களுக்கு ரூ.14.95 டாக் டைம் நன்மையை வழங்குகிறது. இத்துடன் கிடைக்கும் மற்ற நன்மைகள் அனைத்தும் முந்தைய திட்டத்தை போலவே இருக்கும். இறுதியாக,
வோடபோன்-ஐடியா ரூ.19 விலையில் 1 ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது.
விஐ நிறுவனம் ரூ.25 விலையில் என்ன நன்மையை வழக்குகிறது?
இந்த திட்டம் 1 நாள் வேலிடிட்டியுடன் 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல்லை போலவே விஐ நிறுவனமும் ரூ.20 விலையில் ஒரு ரீசார்ஜ் வவுச்சரை வழங்குகிறது. இதுவும் ரூ.14.95 மதிப்பிலான டாக் டைம் நன்மையை வழங்குகிறது. எது எப்படியாக இருந்தாலும், பிஎஸ்என்எல் வழங்கிய ரூ.22 திட்டத்தை போல எந்த திட்டமும் 90 நாள் வேலிடிட்டியை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications