Home
News

BSNL மலிவு விலை ரீசார்ஜ்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. யாரு விடுவா?

தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக சலுகைளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுவரும் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது மலிவு விலையில் அதிக நன்மைகளைத் தரும் பிஎஸ்என்எல் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.215 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 215 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 30 நாட்கள் வேலிடிட்டி இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.215 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா பெறமுடியும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

BSNL மலிவு விலை ரீசார்ஜ்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.215 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில்
கிடைக்கின்றன.

அதன்படி சேலஞ்சர் அரினா (Challenger Arena), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), கேம்ஆன் (Gameon), பிஎஸ்என்எல் டியூன் (BSNL Tunes), லிஸ்ட்ன் பாட்காஸ்ட் (Lystn Podcast), ஜிங் மியூசிக் (Zing Music), ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல நன்மைகள் இந்த பிஎஸ்என்எல் ரூ.215 திட்டத்தில் கிடைக்கின்றன.

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 239 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக ஒரு மாதம் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 62ஜிபி வரை டேட்டாவை பெற முடியும். பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த திட்டத்தில் உள்ளது.

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 100எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் ரூ.10 மதிப்பிலான டால்க் வேல்யூ வழங்கப்படுகிறது. குறிப்பாக ரூ.239 திட்டத்தில் குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்(BSNL RS 299 Prepaid Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்கும். 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

மேலும் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதிக டேட்டா இந்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 215, Rs 239 And Rs 299 prepaid plans offer high data and unlimited calls: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X