BSNL பயனருக்கு ஜாக்பாட்.. ரூ.215 முதல் தினசரி 2GB | 3GB ஹை-ஸ்பீட் டேட்டா.. மக்கள் கூட்டம் கூட்டமா ரீசார்ஜ்..
பிஎஸ்என்எல் (BSNL) என்ற அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தற்போது ஹெவி டேட்டா பயனர்களுக்காக (heavy data users) இரண்டு புதிய மலிவு விலை திட்டங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் ரூ. 215 விலை (BSNL Rs 215 Plan) முதல் துவங்குகிறது. குறைந்த செலவில் அதிக டேட்டா நன்மையை எதிர்பார்க்கும் வடிக்கையாளர்களுக்காக BSNL இத்தகைய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த புதிய பிஎஸ்என்எல் ஹெவி டேட்டா திட்டங்களை (BSNL heavy data plans) பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
குறைந்த செலவில் அதிக டேட்டா நன்மை வேண்டுமா? அப்படியானால், நீங்கள் இந்தியாவில் உள்ள ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) என்றழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்களை திட்டங்களை ரீசார்ஜ் செய்ய திட்டமிடுவதற்கு முன்பு, பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வழங்கும் இந்த இரண்டு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை கட்டாயம் நீங்கள் பார்வையிட வேண்டும்.

BSNL பயனருக்கு ஜாக்பாட்.. ரூ.215 முதல் தினசரி 2GB | 3GB ஹை-ஸ்பீட் டேட்டா:
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டங்களில் ஒன்று 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (BSNL 30 days validity plan) உடனும், மற்றொரு திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (BSNL 84 days validity plan) உடனும் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. பிஎஸ்என்எல் மிகமிக குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மையை வழங்கும் திட்டமாக பிஎஸ்என்எல் ரூ. 215 திட்டத்தை பட்டியலிட்டுள்ளது.
1. பிஎஸ்என்எல் ரூ. 215 திட்டம் (BSNL Rs 251 Plan):
இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ. 215 திட்டம் (BSNL Rs 251 Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினசரி 2GB ஹை-ஸ்பீட் டேட்டா (high speed data) நன்மை மற்றும் தினசரி 100 எஸஎம்எஸ் (SMS) நன்மை ஆகிய நன்மைகளை 30 முழுமையான நாட்களுக்கு வழங்குகிறது. ஆம், இதுவொரு முழுமையான 1 மாத திட்டமாகும் (1 month validity plan). இந்த திட்டம் மொத்தமாக 60GB டேட்டா நன்மை வழங்குகிறது.
2. பிஎஸ்என்எல் ரூ. 628 திட்டம் (BSNL Rs 628 Plan):
இந்த திட்டம் தினசரி 3GB ஹை-ஸ்பீட் டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகிய அணைத்து நன்மைகளையும் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் இந்த திட்டம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் ஏறக்குறைய 3 மாதங்களுக்கு ஒரு சில நாள் குறைவான வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த திட்டம் மொத்தமாக 252GB டேட்டாவை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் 4ஜி சேவை (BSNL 4G service):
இந்த இரண்டு பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களும் அதிக டேட்டா நன்மையை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததாக திகழ்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் தற்போது பல வட்டங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை (BSNL 4G service) வழங்க துவங்கியுள்ளது. இதனால், பல இடங்களில் இணைய வேகம் ஹை-ஸ்பீட் டேட்டாவாக கிடைப்பதை பயனர்கள் உறுதி செய்துள்ளார்கள். உங்கள் பகுதியில் 4ஜி நெட்வொர்க் (BSNL 4G network) கிடைக்கிறதா என்று செக் செய்து பாருங்கள்.
இப்போது கிடைக்காவிட்டாலும், பிஎஸ்என்எல் நிறுவனம் வரும் ஜூலை 2025-க்குள் இந்தியா முழுவதும் அதன் BSNL 4G சேவையை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துவிடும் என்று உறுதிபட தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








