Home
News

BSNL ருத்ர தாண்டவம்.. 425 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. வெறும் ரூ.2099-க்கு.. 2 ஜிபி டேட்டா வருது!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற டெலிகாம் நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படி வருடாந்திர திட்டங்களில் 425 நாட்கள் வேலிடிட்டியை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. இப்போது, 2 திட்டங்களில் 425 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. வெறும் ரூ.2099 விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் ஒரு வருடத்துக்கும் மேலாக கிடைப்பது, இந்த நிறுவனத்தில் மட்டும்தான். இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 2099 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2099 Prepaid Plan): இந்த பிஎஸ்என்எல் வருடாந்திர திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் 365 நாட்களுக்கும் மேல் கிடைக்கிறது. இந்த விலைக்கு எந்தவொரு டெலிகாம் நிறுவனங்களிடமும் திட்டங்கள் கிடையாது. ஆகவே, இந்த திட்டத்துக்கு 425 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

BSNL ருத்ர தாண்டவம்.. 425 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

இருப்பினும், 395 நாட்களுக்கு மட்டுமே டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்களை பயன்படுத்த முடியும். ஆகவே, அதற்கு பிறகு 30 நாட்களுக்கு சிம் ஆக்டிவ் (SIM Active) மட்டுமே கிடைக்கும். இதில் இன்கம்மிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். எப்படி பார்த்தாலும், ஒரு வருடத்துக்கு மேல் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் சலுகைகள் கிடைக்கின்றன.

இப்போது, அந்த 395 நாட்களுக்கு என்னென்ன சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது என்பதை பார்த்துவிடுவோம். இந்த பிஎஸ்என்எல் ரூ 2099 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் கால்கள் (National Roaming Calls) செய்ய கிடைக்கிறது. தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் வருகிறது.

ஆகவே, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் டேட்டாவுக்கு ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) சலுகை வருகிறது. இந்த சலுகை மூலம் 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் உங்களுக்கு டேட்டா சலுகை கொடுக்கப்படும். இது 395 நாட்களுக்குள் மட்டுமே பொருந்தக் கூடியது.

ஆகவே, கூடுதலாக கிடைக்கும் 30 நாட்களில் டேட்டா மட்டுமல்லாமல், எஸ்எம்எஸ்கள் மற்றும் வாய்ஸ் கால்களுக்கு கட்டணங்கள் இருக்கும். இந்த 425 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ 2099 விலை திட்டமானது GP-II கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் 425 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமானால், ரூ 2399 விலையிலான வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.

பிஎஸ்என்எல் ரூ 2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan): இந்த வருடாந்திர திட்டத்துக்கும் 425 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், 395 நாட்களுக்கு டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும், அடுத்த 30 நாட்களுக்கு சிம் ஆக்டிவ் மட்டுமே கிடைக்கும். ஆகவே, முந்தைய திட்டத்தை போல இந்த திட்டத்துக்கும் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 395 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகளை பெற்று கொள்ளலாம். அதேபோல தினமும் 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும். டேட்டாவை பார்க்கையில், முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 2 ஜிபி கணக்கில் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இதுபோக, 2 ஜிபிக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை தொடர்ந்து கிடைக்கும். இந்த மூன்று சலுகைகளும் 395 நாட்களுக்கு பயன்படுத்தலாம். ஆகவே, 2 திட்டங்களிலும் கூடுதலாக 30 நாட்கள் சிம் ஆக்டிவ் கிடைப்பதால், அடுத்த ரீசார்ஜ் செய்ய 30 நாட்கள் அவகாசம் கிடைக்கிறது. இதுபோன்ற சிம் ஆக்டிவ் மற்ற நிறுவனங்களில் இலவசமாக கிடைக்காது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 2099 Plan With Unlimited Voice Calls 2GB Data 425 Days Validity Check Annual Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X