Jio, Airtel-ஐ முடித்த BSNL.. மறுபடியும் ரூ.202-க்கு வாய்ஸ் கால்கள்.. 100 எஸ்எம்எஸ்.. ஆனால், இது மட்டுமில்லை!
இந்திய டெலிகாம் மார்கெட்டில் ரூ.200 விலைக்கு அதிகபட்சம் 28 நாட்கள் வேலிடிட்டியை மட்டுமே ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்கள் கொடுக்கின்றன. ஆனால், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, 32 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல் இன்சூரன்ஸ் சலுகையும் கொடுக்கப்படுகிறது. மற்ற நிறுவனங்களைவிட அதிக வேலிடிட்டி கிடைப்பதால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படவில்லை. இருப்பினும், நிமிடங்களில் லிமிட் வைக்கப்பட்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல டேட்டாவும் லம்ப்-சம் சலுகையில் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.202 திட்ட விவரங்கள் (BSNL Rs 202 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 32 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த நாட்களில் 300 நிமிடங்களுக்கு மட்டுமே வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படும். இந்த நிமிடங்களுக்குள் வாய்ஸ் கால்களை செய்ய வேண்டும். லோக்கல் (Local), எஸ்டிடி (STD) கால்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.
இதற்கு மேல் சென்றால், வாய்ஸ் ஒன்லி திட்டங்களுக்கு செல்ல வேண்டும். அதேபோல டேட்டாவும் போதுமான அளவுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, 32 நாட்கள் வேலிடிட்டி முழுவதுக்கும் 5 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டேட்டாவுக்கு பிறகும் வழக்கம்போல 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும், மொத்தமாக 100 எஸ்எம்எஸ்களை இந்த பிஎஸ்என்எல் ரூ.202 திட்டம் கொடுத்துள்ளது. இந்த சலுகைகள் போக இன்சூரன்ஸ் சலுகையும் கிடைக்கிறது. இந்த இன்சூரன்ஸ் விவரங்களை பிஎஸ்என்எல் இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மலிவான விலையில் 32 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பது, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மட்டுமேயாகும். இதனாலேயே வரவேற்பு பெற்று வருகிறது.
இதுபோக கூடுதல் வேலிடிட்டி கொடுக்கும் பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டத்தில் சலுகையானது, நாளை முடிவடைகிறது. அதாவது, இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். ஆனால், அக்டோபர் 15ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு கூடுதலாக 15 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, 380 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ.2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் வழக்கமாக கஸ்டமர்களுக்கு 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படும். ஆனால், அக்டோபர் 15-க்குள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 15 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி கொடுக்கப்படும். ஆகவே, 380 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களிலும் டேட்டா, வாய்ஸ் கிடைக்கும்.
ஆகவே, பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 380 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கொடுத்து இருக்கிறது. ஆகவே, மொத்தமாக 760ஜிபி டேட்டாவை இந்த பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டத்தில் பெற்று கொள்ளலாம். இந்த டேட்டா சலுகை போக 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) இந்த பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் பெற்று கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலல்லாமல், இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இந்த திட்டத்தில் விலையும் மலிவாகவும், சலுகைகள் அதிகமாகவும் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications
