BSNL-ன் பெரிய மனசு.. SIM கார்டை தூக்கி போட நினச்சவங்க மனசு கூட மாறிடுச்சு.. புது 90 நாள் திட்டம்.. என்ன விலை?
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இந்தியாவில் உள்ள தனது வடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தை 90 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (BSNL prepaid plan with 90 days validity) உடன் வழங்கியுள்ளது. இதுவரை எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் வழங்கிடாத புதுமையான மற்றும் மிகவும் வித்தியாசமான திட்டத்தை BSNL பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. குறிப்பாக, பிஎஸ்என்எல் சிம் கார்டை (BSNL SIM card) தூக்கி எரிய நினைத்தவர்கள் கூட, இப்போது இந்த புதிய திட்டத்தை பார்த்துவிட்டு பிஎஸ்என்எல் பக்கம் படையெடுக்க துவங்கியுள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
இந்திய மக்களின் தேவையை அறிந்து, அவர்களுக்கேற்ற சிறந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தை (best BSNL prepaid plans) அறிமுகம் செய்யும் வேலையை பிஎஸ்என்எல் நெட்வொர்க் (BSNL network) தற்போது மிகவும் சிறப்பாக கற்பனைக்கு அப்பால் செயல்பட்டு வருகிறது. இதுவரை எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் (telecom companies) வழங்கிடாத ஒரு புதுமையான ப்ரீபெய்ட் திட்டத்தை BSNL தற்போது அறிமுகம் செய்துள்ளது.

BSNL-ன் பெரிய மனசு.. பிஎஸ்என்எல் SIM கார்டை தூக்கி போட நினச்சவங்க மனசு கூட மாறிடுச்சு:
பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்த திட்டங்களிலேயே மிகவும் வித்தியாசமான திட்டம் என்றால் அது இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ. 201 திட்டம் தான் (BSNL Rs 201 Plan). இந்த் திட்டம் ஏறக்குறைய நாள் ஒன்றிற்கு வெறும் 2 ரூபாய் செலவில் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. பட்ஜெட் விலையில் நீண்ட காலத்திற்கு செல்லுபடியாகும் திட்டத்தை தேடிவர்களுக்கு இது பெஸ்ட் திட்டமாகும்.
இந்த பிஎஸ்என்எல் 201 திட்டம் 300 நிமிட வாய்ஸ் கால்ஸ் (300 minutes voice calls) நன்மையை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் 6GB டேட்டா (data) நன்மையை வழங்குகிறது. இதில் உங்களுக்கு 99 இலவச எஸ்எம்எஸ் (Free SMS) நன்மையையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது. இந்த திட்டம் பிரத்தியேகமாக GP2 வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ. 201 திட்டம் தான் (BSNL Rs 201 Plan):
அதாவது, இந்த திட்டம் கிரேஸ் பீரியட் 2 (Grace Period 2) பிரிவின் கீழ் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கானது. இன்னும் புரியும் விதமாக சொல்ல வேண்டுமென்றால், பிஎஸ்என்எல் சிம் கார்ட்டின் (BSNL SIM card) வேலிடிட்டி முடிந்து 8 முதல் 165 நாட்களுக்கு இடையில் செயல் இழந்து கிடக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு (SIM validity lapsed between 8 to 165 days) இந்த திட்டம் கைகொடுக்கிறது.
செயல்பாட்டில் இல்லாமல் இருக்கும் வாடிக்கையாளர்களை கூட மதித்து இத்தகைய திட்டத்தை அறிமுகம் BSNL-க்கு எவ்வளவு பெரிய மனசு என்று மக்கள் புகழாரம் சூட்டி வருகிறார்கள். இத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனம் மற்றொரு 90 நாள் திட்டத்தை ரூ. 411 விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் பிஎஸ்என்எல் ரூ. 411 திட்டம் (BSNL Rs 411 Plan).
பிஎஸ்என்எல் ரூ. 411 திட்டம் (BSNL Rs 411 Plan):
இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை உடன் இலவச நேஷனல் ரோமிங் சேவையை வழங்குகிறது. இந்த BSNL 411 Plan தினசரி 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் கூடுதலாக தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் இந்த திட்டம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் மொத்த செல்லுபடியாகும் காலம் 90 நாட்களாகும். இந்த இரண்டு புதிய திட்டங்களும் தற்போது இந்தியாவின் பல வட்டங்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








