Home
News

BSNL: அதிரடி அறிவிப்பு: 2000ஜிபி டேட்டா தரும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது பிஎஸ்என்எல்.!

மற்ற டெலிகாம் நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டும் அதன் பாரத் ஃபைபர் திட்டத்தில் அறிமுகம் செய்துள்ளது.

சென்னை மற்றும் தமிழக தொலைத் தொடர்பு வட்டங்களில்

சென்னை மற்றும் தமிழக தொலைத் தொடர்பு வட்டங்களில்

அதிலும் ஆச்சரியம் தரும் விஷயம் என்னவென்றால்,சென்னை மற்றும் தமிழக தொலைத் தொடர்பு வட்டங்களில் இந்த பிஎஸ்என்எல்பாரத் ஃபைபர் திட்டம் அணுக கிடைக்கிறது. மேலும் இந்த பாரத் ஃபைபர் திட்டம் மற்றும் அதன் விலை உள்ளிட்டஅனைத்து விவரங்களையும் பார்ப்போம்.

 2000ஜிபி டேட்டா

2000ஜிபி டேட்டா

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பாரத் ஃபைபர் புதிய திட்டத்தின் விலை ரூ.2,999-என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின்இணைய வேகம் 100எம்பிபிஎஸ் ஆகும். குறிப்பாக இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு சரியாக 2000ஜிபிடேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே டேட்டா பற்றி பிரச்சணை கணடிப்பா இருக்காது.

வரம்பற்ற குரல் அழைப்பு

வரம்பற்ற குரல் அழைப்பு

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2999-திட்டத்தில் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்புநன்மைகைள கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.999-மதிப்புள்ள அமேசான் ப்ரைம் சந்தாபோன்ற நன்மைகளுகம் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

பேஸிக்  பாரத் ஃபைபர் திட்டங்கள்

பேஸிக் பாரத் ஃபைபர் திட்டங்கள்

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இரண்டு பேஸிக் பாரத் ஃபைபர் திட்டங்களைப் பற்றி பார்ப்போம், ஒன்று ரூ.849திட்டமாகவும், மற்றொன்று ரூ.1,277-திட்டமாகவும் வைத்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களின் முறையே 50எம்.பி.பிஎஸ் மற்றும் 100எம்.பி.பி.எஸ் வேகத்தின் கீழ் முறையே 600ஜிபி மற்றும் 750ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 40ஜிபி அளவிலான டேட்டா

மேலே கூறப்பட்ட பேஸிக் பாரத் ஃபைபர் திட்டங்களுக்கு அடுத்தபடியாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2,499-திட்டம்உள்ளது. இது ஒரு நாளைக்கு 40ஜிபி அளவிலான டேட்டா நன்மையை வழங்குகிறது.

ஹை-எண்ட் திட்டங்கள்

அதன்பின்பு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.4,499-திட்டமானது தினசரி 55ஜிபி டேட்டாவும், 5,999-பாரத் ஃபைபர் திட்டமானதுஒரு நாளைக்கு 80ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இதிலும் ஹை-எண்ட் திட்டங்கள் உள்ளன, அதைப் பற்றிபார்ப்போம்.

ஹை-எண்ட் திட்டங்கள்

ஹை-எண்ட் திட்டங்கள்

பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் ஹை-எண்ட் திட்டங்கள் என்று கூறப்படும் ரூ.9,999 மற்றும் ரூ.16,999-திட்டங்கள் ஆனதுஒரு நாளைக்கு 120ஜிபி மற்றும் 170ஜிபி டேட்டா நன்மைகளுடன் கிடைக்கும். பின்பு இந்த திட்டங்களில் வரம்பற்ற குரல் அழைப்புகள், அமேசான் ப்ரைம் உறுப்பினர் போன்ற அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 2,999 Bharat Fibre Broadband Plan Launched With 2TB Data Benefit : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X