Home
News

வேற லெவல் ரீசார்ஜ் திட்டங்கள்.. 365 நாள் வேலிடிட்டி.. தினமும் 3ஜிபி டேட்டா.. அள்ளி தரும் BSNL..

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா நன்மையை வழங்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1999 prepaid plan) மொத்தமாக 600ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

வேற லெவல் ரீசார்ஜ் திட்டங்கள்.. 365 நாள் வேலிடிட்டி, அள்ளி தரும் BSNL!

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் டேட்டாவை விரும்பும் பயனர்கள் இந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது மிகவும் நல்லது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 160 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 320ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். அதேபோல் இந்த பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில்
தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்ளவும்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா
நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேற லெவல் ரீசார்ஜ் திட்டங்கள்.. 365 நாள் வேலிடிட்டி, அள்ளி தரும் BSNL!

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் சில முக்கிய இடங்களில் 4ஜி (4G) சேவையை வழங்கிவிட்டது. இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கிவிட்டால் இன்னும் அதிக பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1999, Rs 997, Rs 599 plans offering long validity and unlimited calls: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X