BSNL செய்கை.. 330 நாள் ரீசார்ஜில் டிஸ்கவுண்ட்.. மாசம் ரூ.182 க்கு டெய்லி டேட்டா, வாய்ஸ், SMS-னு அள்ளிக்கோங்க!
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது, அதன் எக்ஸ் தள பக்கம் வழியாக "ஷேர் அண்ட் கேர்" (Share and Care) என்கிற புதிய ரீசார்ஜ் ஆபரை அறிவித்து உள்ளது.
ஷேர் அண்ட் கேர் ஆபரின் கீழ், பிஎஸ்என்எல் வலைத்தளம் (BSNL Website) அல்லது பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப் (BSNL Selfcare App) வழியாக ரூ.1999 அல்லது ரூ.485 ஆகிய 2 திட்டங்களை ரீசார்ஜ் செய்தவதன் மூலம், அதன் எம்ஆர்பி இல் இருந்து 5% பகிர்ந்து கொள்ள முடியும்.

இதன் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 2.5% தள்ளுபடியும், மீதமுள்ள 2.5% சமூக நலனுக்காகவும் பகிர்ந்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த ஷேர் அண்ட் கேர் ஆபர் ஆனது வருகிற நவம்பர் 18 ஆம் தேதி வரை அணுக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.1999 திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: ரூ.1999 திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை இதன் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் டெய்லி 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 330 நாட்கள் ஆகும்.
பிஎஸ்என்எல் ரூ.485 திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: ரூ.485 திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை இதன் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் டெய்லி 2ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும்.
இதோடு சேர்த்து பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப் வழியாக ரூ.199 அல்லது அதற்கு மேல் உள்ள எந்தவொரு திட்டத்தை ரீசார்ஜ் செய்தாலும், ஒவ்வொரு ரீசார்ஜிலும் 2.5% உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆபரும் வருகிற 2025 நவம்பர் 18 ஆம் தேதி வரை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆபர் குறித்த எக்ஸ் தள பதிவில், "உங்கள் அன்புக்குரியவர்களுக்காக பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப் மூலம் ரூ.199 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்து ஒவ்வொரு ரீசார்ஜிலும் 2.5% உடனடி தள்ளுபடியை பெறுங்கள். இது 18 நவம்பர் 2025 வரை செல்லுபடியாகும்" என்று பிஎஸ்என்எல் இந்தியா எக்ஸ் பக்கம் கூறியுள்ளது.
ரூ.1 4ஜி திட்டமும் கூட இன்னமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஆனால் இது இன்னும் சிறிது நாட்களுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் . இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் - நவம்பர் 15 ஆம் தேதி வரை கிடைக்கும். இதை - பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் கவரேஜ் மற்றும் சேவைகளை முழுமையாக அனுபவிக்க அனுமதிக்கும் ஒரு "ட்ரையல் பிளான்" (Trial Plan) என்றே கூறலாம்
இதன் கீழ் இந்தியாவிற்குள் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், டெய்லி 2ஜிபி அதிவேக டேட்டா, டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 1 இலவச சிம் கார்டு ஆகியவைகள் கிடைக்கும். இதேபோல ரூ.499 மீது 3 மாதங்களுக்கு ரூ.100 தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.499 என்பது பிஎஸ்என்எல் ஃபைபர் பேஸிக் பிளான் ஆகும். இந்த திட்டத்தின் அசல் விலை ரூ.499 ஆகும்.
ஆனால் இது குறிப்பிட்ட சலுகை காலத்திற்கு ரூ.100 தள்ளுபடியை பெற்று ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் அறிவித்திருந்தது. ரூ.399 (தள்ளுபடி செய்யப்பட்ட விலை) திட்டத்தின் கீழ் 3.3டிபி அல்லது 3300ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 60 எம்பிபிஎஸ் ஆகும். டேட்டா லிமிட்டை தாண்டிய பின்னர் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 4 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.


Click it and Unblock the Notifications








