Home
News

BSNL சிம் இருக்கா.. 2025 ஆண்டில் 365 நாட்களுக்கு ரீசார்ஜ்.. மாதத்துக்கு ரூ.166-க்கு வருது.. அன்லிமிடெ் வாய்ஸ்!

பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் அல்லது புது சிம் கார்டு வாங்கி இருக்கும் கஸ்டமர்கள் இந்த 2025ஆம் ஆண்டில் ஒரு வருடத்துக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், இப்போது பார்க்கப்போகும் ப்ரீபெய்ட் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். மாதத்துக்கு ரூ.166 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 600 ஜிபி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் என்று சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. இந்த மலிவு விலை வருடாந்திர திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்கள் கஸ்டமர்களிடையே வரவேற்பை பெறுகின்றன. ஏனென்றால், நம்ப முடியாத அடிமட்ட விலைக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சலுகைகள் கிடைக்கின்றன. ஒரு வருட ரீசார்ஜ் திட்டங்களிலும் ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருக்கின்றன.

BSNL சிம் இருக்கா.. 2025 ஆண்டில் 365 நாட்களுக்கு ரீசார்ஜ்.. திட்டம்?

இருப்பினும், சில திட்டங்களில் வாய்ஸ் கால்கள் சலுகை மட்டுமே அதிகமாக கிடைக்கும், டேட்டா சலுகைகள் மிகவும் குறைவாக கிடைக்கும். ஆகவே, 365 நாட்கள் வேலிடிட்டியை மட்டும் பார்க்காமல். அதன் சலுகைகளையும் பார்க்க வேண்டி இருக்கிறது. ஆகவே, இப்போது பார்க்கப் போகும் திட்டம் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்கள் என்று மூன்று சலுகைகளுக்கும் பக்கா ஆப்ஷாக இருக்கும்.

இந்த வருடாந்திர திட்டத்தில் தினசரி டேட்டா இருக்காது. இருந்தாலும், அதிகப்படியான லம்ப்-சம் டேட்டா கிடைக்கும். ஆகவே, தேவைக்கு ஏற்ப எளிதாக பயன்படுத்தலாம். அதேபோல வாய்ஸ் கால்களுக்கு எந்த குறையும் இல்லாமல், அனைத்து நெட்வொர்குக்கும் செய்து கொள்ள முடியும். இதுபோக எஸ்எம்எஸ் சலுகைகளையும் இந்த 365 நாட்கள் திட்டம் கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 1999 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Prepaid Plan Details): இந்த பிஎஸ்என்எஸ் வருடாந்திர திட்டத்தில் 600 ஜிபி ஹை-ஸ்பீடு டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இது லம்ப்-சம் டேட்டா சலுகையாக இருந்தாலும், மாதத்துக்கு கணக்கிட்டால், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவுக்கும் அதிகமாகவே கிடைக்கிறது. மேலும், ஃபேர் யூசேஜ் டேட்டாவையும் கொடுக்கிறது.

ஆகவே, 365 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்னதாகவே, இந்த 600 ஜிபி லம்ப்-சம் டேட்டாவை பயன்படுத்திவிட்டாலும் கூட, மீதம் இருக்கும் நாட்கள் முழுவதும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, இந்த வருடாந்திர திட்டத்தில் டேட்டாவுக்கு எந்தவித குறையும் இருக்காது என்பது தெரிகிறது. இதே போலத்தான் வாய்ஸ் கால்களும் இருக்கின்றன.

அதாவது, 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) கிடைக்கிறது. மேலும், எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களையும் (Roaming Voice Calls) கொடுத்துள்ளது. இந்த வாய்ஸ் கால்கள் அனைத்து நெட்வொர்க்குக்கும் பொருந்தும். இப்போது, எஸ்எம்எஸ் சலுகைக்கு வருவோம். டேட்டா சலுகை லம்ப்-சம்மாக கிடைத்தால், எஸ்எம்எஸ் சலுகையும் அப்படித்தான் இருக்கும்.

ஆனால், இந்த திட்டத்தில் தினசரி சலுகையாக எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 100 எஸ்எம்எஸ்கள் தினசரி கணக்கில் 365 நாட்களுக்கும் கிடைக்கிறது. இந்த மூன்று சலுகைகளும் மாதத்துக்கு வெறும் ரூ.166 விலைக்கு கிடைப்பதால், மற்ற எந்த நிறுவனங்களையும்விட அடிமட்ட விலைக்கு கிடைப்பதை இந்த வருடாந்திர திட்டம் உறுதி செய்து இருக்கிறது.

இந்த 600 ஜிபி டேட்டாவுக்கு 4ஜி அல்லது 3ஜி என்று கணக்கு கிடையாது. பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் அதிவேகத்தில் பயன்படுத்தி கொள்ள முடியும். அதேபோல 3ஜி கிடைக்கும் இடத்திலும் குறைவான வேகத்தில் கிடைக்கும். ஆகவே, எப்படி பார்த்தாலும், இந்த திட்டத்தை போல வேறொரு திட்டம் சலுகைகளை கொடுக்கவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1999 Prepaid Plan With 365 Days Validity Check Cheapest Yearly Recharge Plan For 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X