BSNL-க்கு கும்பிடு.. இனி 495ஜிபி டேட்டா.. 330 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்.. எந்த திட்டம்?
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். மேலும் சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் பல கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கியது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை எந்த மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களையும் நீக்கவில்லை.
அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் 330 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1999 Prepaid Plan) தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 330 நாட்கள் ஆகும். திட்டத்தில் எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 495ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 330 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் திட்டத்தில் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம். இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

குறிப்ப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி சலுகை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கூடுதல் வேலிடிட்டி சலுகை நீக்கப்பட்டது. தற்போது நீங்கள் ரூ.2399 ப்ரீபேய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் தான் வேலிடிட்டி கிடைக்கும். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நாட்டில் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
