ஒரே BSNL ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கு நோ டென்ஷன்.. மாதம் ரூ.166-க்கு வாய்ஸ் கால்கள்.. 600 ஜிபி டேட்டா!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படி மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் ஒரு வருட வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. இதில் ஒரு திட்டம் மாதத்திற்கு ரூ.166 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 600 ஜிபி டேட்டாவை கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது. இதில் எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கிறது. இந்த வருடாந்திர திட்டத்தில் கிடைக்கும் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டேட்டாவுக்கு என்று தனி திட்டங்கள், வாய்ஸ் கால்களுக்கு என்று தனி திட்டங்கள் மற்றும் காம்போ திட்டங்கள் என்று பல்வேறு ஆப்சன்கள் இருக்கின்றன. இதேபோல மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களிலும் திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அதில் குறைந்த ஆப்ஷன்களே இருக்கின்றன. ஆனால், இதில் ஏகப்பட்ட திட்டங்கள் இருக்கின்றன. அதிலும் டேட்டா சலுகை அதிகமாகவே கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 1,999 ப்ரீபெய்டு திட்ட ஆஃபர் (BSNL Rs 1,999 Prepaid Plan Offer): இந்த திட்டம் தினசரி டேட்டாவையோ அல்லது குறைவான லம்ப்-சம் டேட்டாவையோ கொடுக்காது. மற்ற நிறுவனங்களில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு அதிகப்படியான லம்ப்-சம் டேட்டாவை கொடுக்கிறது. அதாவது, மொத்தமாக 600 ஜிபி டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கஸ்டமர்கள் பெற்றுக் கொள்ளலாம். இதற்குப் பிறகு போஸ்ட் டேட்டாவும் உங்களுக்கு கிடைக்கும்.
அதாவது, இந்தத் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த மொத்த நாட்களுக்கும் சேர்த்து 600 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டாவை தினசரி லிமிட் இல்லாமல் கஸ்டமர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு நாளைக்கு 1 ஜிபி அல்லது 2 ஜிபி என்ற கணக்கு இல்லாமல், உங்களுக்கு தேவைப்படும் பொழுது அதிகமாகவும் தேவையில்லாத போது குறைவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒருவேளை இந்தத் திட்டத்துக்கு கிடைக்கும் 365 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்பாகவே அந்த 600 ஜிபி டேட்டாவை நீங்கள் முழுவதும் பயன்படுத்தி விட்டால், அதன் பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை தொடர்ந்து கொடுக்கப்படும். ஆகவே, இந்த திட்டத்தில் உங்களுக்கு டேட்டா சலுகை அளவுக்கு அதிகமாகவே கிடைக்கிறது. ஏனென்றால், 600 ஜிபி டேட்டா என்பது ஒரு நாளைக்கு 1.5 ஜிபிக்கும் மேல் டேட்டாவை கொடுக்கும்படி இருக்கிறது.
அதேபோல எஸ்எம்எஸ் சலுகையும் லம்ப்-சம் முறையில் கிடைக்கும் என்று எண்ணிவிட வேண்டாம். இது தினசரி லிமிடில் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அது, வழக்கம் போல் நாம் பயன்படுத்தும்படி நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் என்னும் கணக்கில் கொடுக்கப்படுகிறது. இதுபோக உங்களுக்கு வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கொடுக்கப்படுகிறது. ஆகவே சிம் ஆக்டிவ் (SIM Active) உங்களுக்கு கிடைக்கும்.
இந்த அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையில் லோக்கல் எஸ்டிடி (Local STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களும் (Roaming Voice Calls) அடங்கும். ஆகவே இந்தத் திட்டத்தின் மூலம் வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி எஸ்எம்எஸ், மற்றும் அதிகப்படியான டேட்டா சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் லம்ப்-சம் டேட்டாவாக கிடைப்பதால் டேட்டா வேகம் அதிகமாக கிடைக்கும் பகுதியில் எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
ஒருவேளை தினசரி டேட்டா உடன் ஒரு வருட வேலிடிட்டி கொண்ட திட்டம் வேண்டுமானால் மற்றொரு ஆப்ஷன் பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுக்கிறது. ரூ.2,399 விலைக்கு இந்த ப்ரீபெய்டு திட்டம் கிடைக்கிறது. இதிலும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை இதில் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.


Click it and Unblock the Notifications