BSNL வழங்கும் ரூ.1,999 திட்டம் தான் இப்போ டாப்.. நம்ப முடியாத 425 நாள் வேலிடிட்டி.. இன்னும் நிறைய..
பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் அதன் ரூ. 1,999 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியை நீட்டித்துள்ளது. குறிப்பாக இந்த திட்டம் இதற்கு முன்பு 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டு வந்தது, இப்போது இந்த திட்டம் 425 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் இதன் வேலிடிட்டி நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது, அதிக வேலிடிட்டியுடன் கிடைக்கும் மற்ற நெட்வொர்க் சிறந்த திட்டங்களுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை ஆராயலாம்.

நீண்ட கால திட்டங்கள்
நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டியுடன், இந்த திட்டம் பயனருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi (வோடபோன் ஐடியா) போன்ற நிறுவனங்கள் எப்படியான நீண்ட கால திட்டங்களைத் தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது என்பதை அறிந்துகொள்ளலாம். எந்த நிறுவனம் என்ன விலையில் எப்படியான சலுகைகளை வழங்குகிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi
Vi நிறுவனம் தனது பயனர்களுக்கு ரூ. 2,595 என்ற நீண்டகால திட்டத்தை வழங்குகிறது. அதேபோல், ஏர்டெலில் இருந்து ரூ. 2,498 திட்டத்தையும், ஜியோவிலிருந்து ரூ. 2,121 திட்டத்தையும் நிறுவனம் தனது பயனர்களுக்கு வழங்குகிறது. இவற்றை பிஎஸ்என்எல்லின் ரூ. 1,999 திட்டத்துடன் ஒப்பிட்டு, எந்த திட்டங்கள் பிஎஸ்என்எல் திட்டத்துடன் மிக நெருக்கமாக உள்ளது என்று பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 1,999 திட்டம்
இத்திட்டம் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டாவையும், வரம்பற்ற அழைப்பு (ஒவ்வொரு நாளும் 250 நிமிடங்கள்) மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இத்துடன், 365 நாட்களுக்கு லோக்தூம் உள்ளடகம், 2 மாத ஈரோஸ் நவ் சந்தா போன்ற கூடுதல் நன்மைகளுடன், இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் முந்தைய 365 நாள் வேலிடிட்டியிலிருந்து இப்பொழுது 425 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது.

Vi ரூ. 2,595 திட்டம்
இந்த திட்டம் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டாவையும், வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது . இந்த திட்டம் ZEE5 பிரீமியம், Vi மூவிஸ் மற்றும் டிவி சேவைக்கான 1 ஆண்டு அணுகல், எம்.பி.எல் மீது உறுதிப்படுத்தப்பட்ட ரொக்க போனஸ் மற்றும் சோமாடோ ஆர்டர் தள்ளுபடி போன்ற கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் இப்போது Vi இன் 'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' சலுகையுடன் வருகிறது.

ஜியோ ரூ. 2,121 திட்டம்
இந்த திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, 12,000 நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) நிமிடங்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் வருகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு 336 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்துடன் பயனர்கள் அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கான பாராட்டு சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ. 2,498 திட்டம்
இந்த திட்டம் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இதன் மூலம், பயனர்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹெலோட்டூன்ஸ், விங்க் மியூசிக் , ஷா அகாடமிக்கு 1 ஆண்டு அணுகல் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனையில் ரூ. 150 கேஷ்பேக் ஆகியவை கிடைக்கும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி தன்மை 365 நாட்களாகும்.

பிஎஸ்என்எல் ரூ. 1,999 சிறந்த திட்டமா?
பயனர்கள் பெறும் நன்மைகளின் அடிப்படையில் மட்டும் பார்த்தால், பிஎஸ்என்எல்லின் ரூ. 1999 திட்டம் மலிவானது மற்றும் அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதில் உள்ள ஒரே பிரச்சினை என்னவென்றால், இது 3ஜி சேவையை வழங்குகிறது. ஜியோ, ஏர்டெல் போன்ற மற்ற ஆபரேட்டர்கள் 4ஜி சேவையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 3G பயன்படுத்துவதில் உங்களுக்குச் சிக்கல் இல்லை என்றால் பிஎஸ்என்எலின் இந்த திட்டம் சிறந்த திட்டம் தான்.


Click it and Unblock the Notifications