ஏர்டெல்லுக்கு கும்பிடு.. மாசம் ரூ.166 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 600GB டேட்டா.. பிஎஸ்என்எல் Vs ஏர்டெல்!
ஏர்டெல் (Airtel) நிறுவனம் 365 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே அடங்கிய திட்டத்தை ரூ.1849 விலைக்கு கொடுத்தால், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதேபோல 365 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல் கூடவே 600 ஜிபி டேட்டாவை ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கிறது. மாதாந்திரம் ரூ.166 செலவில் இந்த திட்டம் கிடைக்கிறது. இந்த வருடாந்திர திட்டங்களில் எது சிறந்தது?
ஏர்டெல் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1849 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் புதிதாக களமிறங்கி இருக்கிறது. வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் மட்டுமே கொடுக்கும் வருடாந்திர திட்டமாக இது இருக்கிறது. ஆகவே, 365 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் இருக்கும். ஆனால், எஸ்எம்எஸ் தினசரிக்கு கிடைக்காது.

மொத்தமாக 3600 எஸ்எம்எஸ்களாக கொடுக்கப்பட்டுவிடும். இதை 365 நாட்களுக்கும் தேவைப்படும்போது அனுப்பி கொள்ளலாம். முன்கூட்டியே முடித்துவிட்டால், கூடுதலாக கட்டணம் செலுத்தி அனுப்ப வேண்டி இருக்கும். ஆனால், வாய்ஸ் கால்கள் அப்படியில்லை, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படுகிறது.
இது வருடம் முழுவதுக்கும் பொருந்தும். ஆகவே, வாய்ஸ் கால்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது. அதேபோல 365 நாட்களுக்கு சிம் ஆக்டிவ் கிடைக்கிறது. இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கிறதா என்றால், இல்லை. ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) சலுகையும், இலவச ஹலோ ட்யூன்ஸ் (Free Hellotunes) சலுகையும் வருகிறது.
இந்த திட்டத்துக்கு மாதம் செலவாகும் தொகையை கணக்கிட்டு பார்த்தால் ரூ.154ஆக இருக்கிறது. ஆனால், டேட்டா கிடையாது. அதுவே மாதத்துக்கு வெறும் ரூ.166 செலவில் கிடைக்கும் பிஎஸ்என்எல் ரூ.1999 திட்டத்தில் 600 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, வெறும் ரூ.150 கூடுதலாக செலுத்தி இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நம்ப முடியாத டேட்டா சலுகை கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1999 Prepaid Plan): முந்தைய வருடாந்திர திட்டத்தை போலல்லாமல், இந்த திட்டத்தில் கூடுதலாக டேட்டா சலுகை கிடைக்கிறது. அதுவும், லம்ப்-சம் டேட்டாவாக கொடுக்கப்படுகிறது. ஆகவே, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளுடன் டேட்டாவையும் பயன்படுத்த முடியும். தினசரி கணக்கில் எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன.
அதாவது, இந்த 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாள்தோறும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல 365 நாட்களுக்கும் நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ள முடியும். இந்த சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே இருக்கலாம்.
ஆனால், டேட்டா சலுகைகளை இந்த திட்டத்தில் அடித்து கொள்ள முடியாது. ஏனென்றால், 365 நாட்களுக்கு 600 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த 600 ஜிபிக்கு பிறகும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் உங்களால் பயன்படுத்தி கொள்ள முடியும்.
இருப்பினும், இது லம்ப்-சம் டேட்டாவாக இது இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் முழுவதும் பயன்படுத்தலாம். இப்படி ஏர்டெல் ரூ 1849 திட்டத்திலும், பிஎஸ்என்எல் ரூ 1999 திட்டத்திலும் சலுகைகள் இருக்கின்றன. பிஎஸ்என்எல் திட்டத்துக்கு ரூ 150 மட்டுமே அதிகமாக இருக்கிறது. ஆனால், அந்த விலைக்கு டேட்டாவையும் கொடுக்கிறது. அதுவும் அதிகப்படியாக வழங்குகிறது.
எந்த திட்டம் சிறந்தது? இந்த சலுகைகளின் அடிப்படையில் பார்த்தால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டமே சிறந்ததாக இருக்கிறது. உண்மையில் டேட்டா வேகத்தில் மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனம் பின்தங்கி இருக்கிறது. இருப்பினும், 600 ஜிபி டேட்டாவை கொடுத்துள்ளது. ஆகவே, டேட்டா அல்லாத ஏர்டெல் திட்டத்தைவிட இந்த திட்டம் நிச்சயம் சிறந்ததாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








