BSNL ஒரே போடு.. மாதம் ரூ.181 க்கு 330 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1.5 ஜிபி டேட்டா!
ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு வருடாந்திர திட்டங்களை கொடுத்து வரும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, முக்கிய வருடாந்திர திட்டத்தில் (Yearly Plan) கூடுதல் டேட்டாவை கொடுக்கிறது. அதேபோல சுதந்திர தினத்தை முன்னிட்டு கூடுதல் வேலிடிட்டியையும் மற்றொரு திட்டத்தில் கொடுக்கிறது.
தனியார் டெலிகாம் நிறுவனங்களில் தினசரி டேட்டாவுடன் கிடைக்கும் வருடாந்திர திட்டங்களின் விலை ரூ.3,000 விலைக்கும் மேல் மட்டுமே இருக்கும். ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.2,000 கீழ் விலைக்கு கொண்ட திட்டங்களிலும் வருடாந்திர வேலிடிட்டி மற்றும் தினசரி டேட்டாவை கொடுக்கிறது. ஒருபடி மேலே சென்று கூடுதல் டேட்டாவையும் கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 330 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, கிட்டத்தட்ட வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். டேட்டாவை பொறுத்தவரையில் தினசரிக்கு 1.5 ஜிபி கிடைக்கும். இந்த டேட்டாவுக்க பிறகும் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.
ஆகவே, 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டா சலுகைகள் போக கூடுதலாக 10 ஜிபி டேட்டாவை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. இது லம்ப்-சம் டேட்டாவாக இருப்பதால், 330 நாட்கள் வேலிடிட்டியில் எப்போது வேண்டுமானாலும் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, டேட்டா சலுகையில் கவலை இருக்காது.
சொல்லப்போனால், 330 நாட்களுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் 495 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதோடு 10 ஜிபி லம்ப்-சம் டேட்டாவையும் சேர்த்து மொத்தமாக 505 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த விலைக்கு டேட்டா சலுகை அதிகமாகவே இருக்கிறது. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் எந்த மாற்றமும் இல்லாமல் வழக்கம்போல கிடைக்கின்றன.
ஆகவே, 330 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்பட்டு இருக்கிறது. தினமும் 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். இப்போது, சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடுக்கப்பட்ட சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ.2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தது. ஆனால், சுதந்திர தினத்தை முன்னிட்டு 47 நாட்களுக்கு கூடுதலாக வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் செப்டம்பர் 12ஆம் தேதி வரையில் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.
இந்த திட்டத்துக்கு கிடைக்கும் சலுகைகள் கூடுதலாக கிடைக்கும் 47 நாட்களுக்கும் கிடைக்கும். ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை வேலிடிட்டி நாட்கள் முழுவதும் செய்து கொள்ளலாம். தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். அதேபோல 2 ஜிபி டேட்டாவை தினசரிக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த சலுகைகள் 365 நாட்கள் முழுவதும் கொடுக்கப்பட்டு வருகின்றன. இப்போது, சுதந்திர தினத்தை முன்னிட்டு 47 நாட்களுக்கு கூடுதலாக வேலிடிட்டி கிடைப்பதால், அந்த நாட்கள் முழுவதும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். செப்டம்பர் 12ஆம் தேதிக்கு பிறகு 365 நாட்கள் மட்டுமே கிடைக்கும்.


Click it and Unblock the Notifications