இறங்கி அடித்த பிஎஸ்என்எல்.. மாதம் ரூ.166 போதும்.. 380 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்ஸ்.. 600GB டேட்டா!
பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு கிடைக்கும் வேலிடிட்டி சலுகைகளை போல ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு எப்போதும் கிடைக்காது என்றே சொல்லலாம். தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அதிகபட்சம் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுத்தால், பிஎஸ்என்எல் நிறுவனம் 380 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. அதிலும் மாதத்துக்கு வெறும் ரூ.166 செலவில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுத்து கஸ்டமர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த மலிவான பிஎஸ்என்எல் வருடாந்திர திட்டத்தின் விவரங்கள் இதோ.
நாடு முழுவதும் படிப்படியாக 4ஜி சேவைகளை கொடுத்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை அப்படியே தக்க வைக்க பழைய திட்டங்களின் சலுகைகளை அந்த நிறுவனம் அதிகரித்து இருக்கிறது. இப்போது, 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்துக்கு 380 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 380 நாட்கள் முழுவதும் லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரி எஸ்எம்எஸ் ஆகிய சலுகைகள் கிடைக்கின்றன. லம்ப்-சம் டேட்டாவாக இருப்பதால், குறைவான டேட்டா கிடைக்கும் என்று நினைத்து விடாதீர்கள். நம்ப முடியாதபடி டேட்டா சலுகை வாரி வழங்கப்பட்டு இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த வருடாந்திர திட்டத்துக்கு வழக்கமாக கிடைக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. ஆனால், இப்போது ரீசார்ஜ் செய்தால், கூடுதலாக 15 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, மொத்தமாக 380 நாட்களுக்கு சலுகைகளை பெற்று கொள்ளலாம். இதில் 600 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
இந்த டேட்டா லம்ப்-சம் சலுகையில் கிடைப்பதால், தினசரி லிமிட்டை கணக்கு வைத்து பயன்படுத்த வேண்டியது கிடையாது. தேவைப்படும்போது அதிகமாகவும், தேவையில்லாதபோ குறைவாகவும் பயன்படுத்தலாம். 380 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்பாகவே இந்த மொத்த டேட்டாவையும் பயன்படுத்திவிட்டால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.
ஆகவே, மீதமுள்ள வேலிடிட்டி நாட்கள் முழுவதும் உங்களுக்கு இந்த வேகத்தில் டேட்டா சேவை கொடுக்கப்படும். ஆனால், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் அப்படியில்லை. வழக்கமான ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைப்பதை போலவே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே, 380 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் கால்களை செய்து கொள்ளலாம்.
இந்த வாய்ஸ் கால்களில் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் (National Roaming) சலுகைகளும் அடங்கும். அதேபோல ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற எந்த நெட்வொர்க்குக்கும் கால்களை செய்து கொள்ளலாம். எஸ்எம்எஸ் சலுகைகளை பொறுத்தவரையில், 100 என்னும் கணக்கில் நாள்தோறும் அனுப்ப கிடைக்கிறது.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவில் வருடாந்திர திட்டங்கள் ரூ.3500 விலைக்கு மேல் தொடங்குகின்றன. ஆனால், பிஎஸ்என்எல்லில் வெறும் ரூ.1999 விலைக்கே கிடைக்கிறது. அதிலும் 600 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கிறது. இந்த ரூ.1999 தொகையை மாதத்துக்கு கணக்கிட்டால் வெறும் ரூ.166 மட்டுமே கஸ்டமர்களுக்கு செலவாகிறது.
ஆகவே, இந்த பிஎஸ்என்எல் ரூ 1999 திட்டமானது அதிக லாபத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. இதில் டேட்டா வேகம் மட்டுமே கஸ்டமர்களுக்கு சிரமத்தை கொடுக்கலாம். ஆனால், பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் நீங்கள் இருந்தால், இதைவிட மலிவான விலையில் இவ்வளவு சலுகைகள் வேறு திட்டத்தில் கிடைக்காது.


Click it and Unblock the Notifications








