Home
News

2024 பிஎஸ்என்எல்லுக்கு.. 4ஜிக்கு முன்பே ஆட்டம்.. மாதாந்திரம் ரூ.166 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி!

2024ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவை கிடைக்கப்போவது, கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட வேளையில், இந்த ஆண்டில் அவர்களுக்கு கிடைக்கப்போகும் ஒரு வருட வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கப்போகும் திட்டத்தை பற்றி பார்க்க போகிறோம். இதுகுறித்த விவரம் இதோ.

பிஎஸ்என்எல் ரூ 1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 600 ஜிபி லம்ப்சம் டேட்டா (Lumpsum Data) வழங்கப்படுகிறது.

மாதாந்திரம் ரூ.166 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!

இந்த டேட்டாவுக்கு தினசரி லிமிட் கிடையாது. எப்போது, வேண்டுமானலும் முழுவதும் பயன்படுத்தலாம். இதை நளொன்றுக்கு கணக்கிட்டால், கஸ்டமர்களுக்கு 1.5 ஜிபி டேட்டாவை விட அதிமாக கிடைக்கிறது. இந்த 600 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படும்.

அதேபோல நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். மேற்கூறிய சலுகைகள் போக 30 நாட்களுக்கான ஈராஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் (Eros Now Entertainment) சப்ஸ்கிரிப்சன் கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல், லோக்துன் கன்டென்ட் (Lokdhun Content) சப்ஸ்கிரிப்சனையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டுகிறது. இந்த திட்டத்துக்கு மாதம் ரூ.166 மட்டுமே தேவைப்படுகிறது. ஒருவேளை லம்ப்சம் டேட்டா இல்லாமல், தினசரி டேட்டா வேண்டுமானால், ரூ 2399 திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.

மாதாந்திரம் ரூ.166 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!

பிஎஸ்என்எல் ரூ 2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த திட்டத்திலும் வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தினசரி 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 790 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம். முந்தைய திட்டத்தை போலவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்.

அதேபோல தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. மேலும், ஈராஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் லோக்தூன் (Lokdhun) சப்ஸ்கிரிப்ஷனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், பிஆர்பிடி (PRBT) சலுகையும் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதைவிட கூடுதல் டேட்டா வேண்டுமானால், ரூ 2999 திட்டம் சரியாக இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ 2999 திட்ட விவரங்கள் (BSNL Rs 2999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிகப்படியான டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு முந்தைய திட்டங்களை போலவே, வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தினசரி 3 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 1,095 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 3 ஜிபி டேட்டாவுக்கு பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டாவை பயன்படுத்த முடியும்.

அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். கடைசி 2 திட்டங்களுக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டாலும், வரும் 2024ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி வரையில், ரீசார்ஜ் செய்தால், கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1999 Plan With 365 Days Validity Data, Voice, OTT Benefits One Year Prepaid Plan For 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X