BSNL.. நவ.18 கடைசி.. மாதாந்திரம் ரூ.181 போதும்.. 330 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1.5ஜிபி டேட்டா!
பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு மாதத்துக்கு ரூ.181 செலவில் 330 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 5 சதவீத கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, திட்டத்தின் எம்ஆர்பி விலையில் இருந்து மேலும் மலிவாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 330 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு சலுகைகள் கிடைக்கும். ஆகவே, ஒரு மாதத்துக்கு செலவாகும் தொகையை பார்த்தால், வெறும் ரூ.181 மட்டுமே தேவைப்படுகிறது. இதுபோக இந்த திட்டத்துக்கு 5 சதவீத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப் மற்றும் வெப்சைட் வழியாக ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு எம்ஆர்பி விலையில் இருந்து 5 சதவீத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதில் 2.5 சதவீத டிஸ்கவுண்ட் கஸ்டமர்களுக்கு திருப்பி கொடுக்கப்படும். மீதமுள்ள 2.5 சதவீத டிஸ்கவுண்ட் சமூக சேவைக்காக பயன்படுத்தப்படும். ஆகவே, எம்ஆர்பி விலையில் இருந்து மலிவாக பெற்று கொள்ளலாம்.
இந்த டிஸ்கவுண்ட் விலையில் ரீசார்ஜ் செய்ய நவம்பர் 18ஆம் தேதியே கடைசி நாளாக இருக்கிறது. ஆகவே, அதற்குள் ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 330 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் கொடுக்கப்படுகிறது.
நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 330 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், மொத்தமாக 495 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதுபோக தினசரி டேட்டா முடிந்தவுடன் பேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படுகிறது.
இதுபோக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இதேபோல எம்ஆர்பி விலையில் இருந்து 5 சதவீத டிஸ்கவுண்ட் போக மற்றொரு திட்டம் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் ரூ.485 விலைக்கு கிடைப்பதால், மலிவான விலைக்கு சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 485 திட்ட விவரங்கள் (BSNL Rs 485 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 72 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. அந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 144 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.
முந்தைய திட்டத்தை போலவே வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகைகளை இந்த திட்டமும் கொடுக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளையும் கொடுத்துள்ளது. இதிலும் 2.5 சதவீத கட்டணம் கஸ்டமர்களுக்கு கிடைக்கும். 2.5 சதவீத கட்டணம் சமூக சேவைக்கு ஒதுக்கப்படும்.
இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டுமல்லாமல், சீனியர் சிட்டிசன்களுக்கு நவம்பர் 18ஆம் தேதி வரையில் மட்டும் ரூ.1,182 விலையில் பிஎஸ்என்எல் சம்மன் திட்டம் (BSNL Samman Plan) கிடைக்கிறது. இந்த விலைக்கு வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள் கொடுக்கிறது. ஆனால், இது புதிதாக பிஎஸ்என்எல் சிம் கார்டு (New BSNL SIM Card) வாங்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications