30 ஆம் தேதி கடைசி.. மாதம் ரூ.181 க்கு 330 நாட்கள்.. BSNL தந்தையர் தின ஆஃபர்.. வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு தந்தையர் தினத்தை முன்னிட்டு மாதம் ரூ.181 செலவில் 330 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டத்தில் 10 ஜிபி போனஸ் டேட்டா வருகிறது. ஜூன் 30ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த தந்தையர் தின ஆஃபரை பெற்று கொள்ள முடியும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களானது (Prepaid Plans), தனியார் டெலிகாம் நிறுவனங்களைவிட மலிவாக கிடைப்பதால் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இப்போது, தந்தையர் தினத்தை முன்னிட்டு 2 திட்டங்களில் போனஸ் டேட்டாவை (Bonus Data) கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 5 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் போனஸ் டேட்டா சலுகைகள் கிடைக்கும். ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 150 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கிறது.
ஆகவே, லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, மொத்த வேலிடிட்டி முழுவதும் 300 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி இருப்பார்கள். தனியார் நிறுவனங்களை போலவே இதிலும் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆகவே, நாளொன்றுக்கு கிடைக்கும் 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா கிடைக்கும். மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டத்தில் செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் எல்லாம் போக, 5 ஜிபி போனஸ் டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவை பெற ஜூன் 30ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது
பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1999 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 11 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். அதாவது, 30 நாட்கள் வீதம் 11 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். ஆகவே, ஒரு 30 நாட்களுக்கு (மாதம்) செலவாகும் தொகை வெறும் ரூ.181ஆக மட்டுமே இருக்கிறது.
இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 330 நாட்கள் முழுவதும் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 330 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 660 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.
முந்தைய திட்டத்தில் கிடைத்த போஸ்ட் டேட்டா சலுகையும் கிடைக்கிறது. ஆகவே, 2 ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து போஸ்ட் டேட்டா கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த திட்டத்தில் செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக 10 ஜிபி போனஸ் டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது.
இதில் கிடைக்கும் போனஸ் டேட்டாவை பெறுவதற்கு ஜூன் 30ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது. மற்ற சலுகைகள் எப்போது ரீசார்ஜ் செய்தாலும் கிடைக்கும். இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்ய பிஎஸ்என்எல் செல்ப் கேர் (BSNL Self Care) ஆப் அல்லது அதிகாரப்பூர்வ இணைதள பக்கத்துக்கு செல்லலாம். இதில் செய்தால், கூடுதல் கட்டணம் இருக்காது.


Click it and Unblock the Notifications