Home
News

DTH, கேபிள் TV கதை முடிந்தது.. 199 நாட்களுக்கு 500+ டிவி சேனல்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 40 எம்பிபிஎஸ் டேட்டா!

கேபிள் டிவி, டிடிஎச் போல்லல்லாமல், பைபர் திட்டத்திலேயே லைவ் டிவி சேனல்களை கொடுத்து வரும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, வெறும் ரூ.1999 விலைக்கு 6 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கொடுத்து, லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், டேட்டா, வாய்ஸ் கால்களை கொடுக்கிறது.

ஐஃஎப்டிவி (IFTV) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இன்ட்ராநெட் ஃபைபர் டிவி (Intranet Fiber TV) சேவையானது, பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஃபைபர் திட்டங்களை பெறும் கஸ்டமர்கள் கூடுதல் செலவு இல்லாமல், இந்த சேவை வழியாக லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட் தேவையில்லை.

DTH, கேபிள் TV கதை முடிந்தது.. 199 நாட்களுக்கு 500+ டிவி சேனல்கள்!

இதில் 6 மாதங்களுக்கு மேலான வேலிடிட்டியை பிஎஸ்என்எல் ரூ.1999 ஃபைபர் ரூரல் ஹோம் வை-பை திட்டம் (Fiber Rural Home Wi-Fi Plan) கொடுக்கிறது. இதில் வருடாந்திர திட்டமும் கிடையாது. மாதாந்திர திட்டமும் கிடையாது. 199 நாட்களுக்கு (6 மாதங்களுக்கு மேல்) வேலிடிட்டி கிடைக்கும். டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் டிவி சேனல்கள் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ஃபைபர் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 199 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 6 மாதங்களுக்கு மேல் 19 நாட்களுக்கு சேவை கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் 40 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா (40 Mbps Speed Data) சலுகை கொடுக்கப்படும்.

இந்த டேட்டா வேகத்தில் 1400 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த டேட்டாவை முழுவதும் பயன்படுத்திவிட்டால் அதற்கு பிறகு 4 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை தொடர்ந்து கிடைக்கும். ஆகவே, வேலிடிட்டி முழுவதும் டேட்டா சேவை கொடுக்கப்படும். இது ஃபைபர் திட்டமாக இருப்பதால் வாய்ஸ் கால்களும் கிடைக்கிறது.

ஆகவே, 199 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி கால்களை (STD Calls) செய்து கொள்ளலாம். இதுபோக ஐஃஎப்டிவி வழியாக 500+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கும். இதற்கு இன்டர்நெட் தேவை கிடையாது என்பதால், டேட்டா சலுகை முடிந்தாலும் லைவ் டிவி சேனல்களை தரமான ரெசொலூனில் பார்த்து கொள்ள முடியும்.

இதுவொரு தனிநபர் மற்றும் ரூரல் திட்டமாக இருக்கிறது. ஆகவே, கிராமப்புறங்களில் இருக்கும் தனிநபர்களுக்கு மட்டுமே கிடைக்கும். கமர்சியல் தேவைக்கு இந்த திட்டத்தை பெற்று கொள்ள முடியாது. இதேபோல சலுகைகளை கூடுதல் டேட்டாவுடன் 30 மாதங்களுக்கு பெற வேண்டுமானால், மற்றொரு ஃபைபர் திட்டம் கொடுக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.5900 திட்ட விவரங்கள் (BSNL Rs 5900 Plan Details): இந்த திட்டத்துக்கு 30 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் 25 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வேகத்தில் 100 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த டேட்டாவுக்கு பிறகு 2 எம்பிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா கிடைக்கும்.

அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை செய்து கொள்ளலாம். இதிலும் 500+ லைவ் டிவி சேனல்கள் கொடுக்கப்படும். இந்த திட்டத்தை 30 மாதங்களுக்கு மட்டுமே பெற முடியும். மாதத்துக்கு அல்லது வருடத்துக்கு பெற முடியாது. 30 மாதங்களுக்கான தொகையை செலுத்திவிட்டால், மீண்டும் ரீபண்ட் கொடுக்கப்படாது. சேவையை மட்டுமே பெற முடியும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த இன்ட்ராநெட் ஃபைபர் டிவி சேவையானது சில மாநிலங்களில் மட்டுமே கிடைக்கிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியும் இருக்கிறது. ஆகவே, இங்கு இருக்கும் ஃபைபர் மற்றும் பாரத்நெட் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த லைவ் டிவி சேனல்கள் கிடைக்கும். டேட்டா, வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே கட்டணம் இருக்கிறது. டிவி சேனல்கள் இலவசமாகவே கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
BSNL Rs 1999 Plan With 199 Days Validity 40 Mbps Speed Data 500 Channels Check Fiber Rural Home Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X