1 டைம் ஆஃபர்.. ஜூன் 30-க்குள் பண்ணா.. 330 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 1.5ஜிபி டேட்டா, 10ஜிபி டேட்டா!
ஜூன் 30ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு 330 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் 10 ஜிபி போனஸ் டேட்டா கிடைக்கும். 1 டைம் ஆஃபராக இருப்பதால், ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆகவே, இப்போதே ரீசார்ஜ் செய்துவிடுங்கள்.
தந்தையர் தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம், வருடாந்திர திட்டத்தில் போனஸ் டேட்டாவை கொடுத்து வருகிறது. ஆகவே, பிஎஸ்என்எல் ரூ.1999 திட்டத்திலும் 10 ஜிபி போனஸ் டேட்டாவை கொடுக்கிறது. ஏற்கனவே, மலிவான விலைக்கு கிடைக்கும் இந்த திட்டத்தில் போனஸ் டேட்டா வருகிறது.
இதனாலேயே கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சொல்லப்போனால், இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் வேலிடிட்டி சலுகைகள் தனியார் டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மலிவாகவே கிடைக்கின்றன. 10 ஜிபி போனஸ் டேட்டா கூடுதல் மதிப்பை பெற்று தந்துள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.1999 திட்டம் (BSNL Rs 1999 Plan): இந்த திட்டத்தில் கிட்டத்தட்ட வருடம் முழுவதும் வேலிடிட்டி கிடைக்கும். அதாவது, 330 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. 11 மாதங்களுக்கு சலுகைகள் கிடைக்கும். இதில் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.

இந்த திட்டத்தை பெற்ற பிறகு 330 நாட்கள் முழுவதும் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) அன்லிமிடெட் சலுகையில் செய்து கொள்ளலாம். அனைத்து நெட்வொர்க்குக்கும் இந்த சலுகை பொருந்தும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் 330 நாட்கள் முழுவதும் செய்து கொள்ளலாம்.
டேட்டாவை பார்க்கையில், தினமும் 1.5 ஜிபி கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா (40 Kbps Speed Data) கிடைக்கும். அதாவது, தினமும் கிடைக்கும் 1.5 ஜிபி டேட்டாவை முன்கூட்டியே முடித்துவிட்டால், அதன்பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா கிடைக்கும்.
1.5 ஜிபி டேட்டா கிடைப்பதால், 330 நாட்களுக்கு 495 ஜிபி டேட்டாவை பெற்றிருக்க முடியும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு 4ஜி வேகத்தில் இந்த டேட்டா சலுகை கொடுக்கப்படும். மற்ற கஸ்டமர்கள் வழக்கமான வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த டேட்டா சலுகைகள் போக 10 ஜிபி போனஸ் டேட்டா கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக 595 ஜிபி டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப் (BSNL Selfcare App) மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு இந்த போனஸ் டேட்டா கிடைக்கும்.
முன்னதாக பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சிம் கார்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக ரூ.51 விலைக்கு ஒரு ரீசார்ஜ் திட்டத்தை களமிறக்கியது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது.
மேலும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வருகிறது. முந்தைய திட்டத்தை போலவே 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இந்த திட்டம் புதிய சிம் கார்டை வாங்கிப் பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications