Home
News

அட்ராசக்கை.. அள்ளிக் கொடுக்கும் BSNL.. 600GB டேட்டா.. 365 நாள் வேலிடிட்டி.. Jio, Airtel, Vi-ஐ விட கம்மி விலை..

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) என்ற அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் இந்திய மக்களை வியப்படைய செய்யும் வகையில், புதிய-புதிய திட்டங்களை பல சுவாரசியமான நன்மைகளுடன் அறிமுகம் செய்து வழங்கி வருகிறது. அந்த வகையில், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களே வியந்து, "யார் சாமி இவன்" இவ்வளவு குறைந்த விலைக்கு 600GB டேட்டா கொடுக்குறான் என்று கடுப்பாகும் அளவிற்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல் (BSNL).

600GB டேட்டா.. 365 நாள் வேலிடிட்டி.. ஒரே பிளானில் அள்ளிக் கொடுக்கும் BSNL:
இதுவரை இந்தியாவில் எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் (Indian telecom companies) வழங்கிடாத ஒரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (prepaid recharge plans) பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற எந்த நிறுவனத்திடமும் 600GB டேட்டாவை (600GB data benefits plan) மொத்தமாக வழங்கும் திட்டம் இல்லை.

அட்ராசக்கை.. அள்ளிக் கொடுக்கும் BSNL.. 600GB டேட்டா.. 365 நாள்..

அதிலும் குறிப்பாக மிகமிக குறைந்த விலையில் 365 நாட்கள் செல்லுபடியுடன் (365 days validity plan) இத்தகைய திட்டத்தை யாரும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் நிறுத்திவிடாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ், கூடுதல் இலவச நன்மைகள் என்று ஒரு பெரிய பட்டியலையே பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்துடன் இணைத்துள்ளது. சரி, வாருங்கள் இது எந்த திட்டம்? இதன் விலை மற்றும் இதன் நன்மைகள் பற்றிய விபரங்களை பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 1999 திட்டம் (BSNL Rs 1999 Plan):
பிஎஸ்என்எல் ரூ. 1999 திட்டம் (BSNL Rs 1999 Plan) ஒரு வருடம் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. அதாவது முழுமையாக ஒரு ஆண்டிற்கான 365 நாள் செல்லுபடியாகும் தடையில்லா வேலிடிட்டியை (BSNL 365 days validity plan) இந்த திட்டம் வழங்குகிறது. இந்த திட்டம் 600GB டேட்டா நன்மையை மொத்தமாக வழங்குகிறது. இதில் தினசரி வரம்பு என்று எந்த விதியும் இல்லை.

இந்த திட்டத்தின் 600GB டேட்டாவை உங்கள் இஷ்டம் போல பயன்படுத்திக்கொள்ளலாம். ஹெவி டேட்டா பயனர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம். 600GB டேட்டா முடிந்த பிறகு, 40Kbps வேகத்தில் அன்லிமிடெட் இணைய சேவை (unlimited data) வழங்கப்படும். இத்துடன் உங்களுக்கு 365 நாட்களுக்கு தடையில்லா அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls benefits) நன்மையும் கிடைக்கிறது.

ஒரு டஜன் இலவச நன்மையை அள்ளி அள்ளிக்கொடும் BSNL:
இந்த திட்டம் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ் நன்மையை தாண்டி, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் வழங்குகிறது. கூடுதல் இலவச நன்மையாக, இந்த BSNL 1999 Plan உடன் OTT தளங்களுக்கான இலவச அணுகல் (BSNL free benefits) மற்றும் மற்ற பிற இலவச நன்மைகள் என்று ஒரு டஜன் நன்மையை பிஎஸ்என்எல் அள்ளி அள்ளிக்கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் 1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL 1999 Prepaid Plan) 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் EROS NOW Entertainment சந்தாவை வழங்குகிறது. ஈரோஸ் நொவ் எண்டெர்டைன்மெண்ட் மூலம் பயனர்கள் பல டிவி உள்ளடக்கங்கள், திரைப்படங்கள் மற்றும் சில ஆன்லைன் நிகழ்ச்சிகளை கண்டு மகிழலாம். இந்த பிஎஸ்என்எல் திட்டம் (BSNL Plan), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), சேலஞ்சர் அரினா (Challenger Arena) போன்ற இலவச நன்மைகளை வழங்குகிறது.

இத்துடன் கூடுதல் சேர்ப்பாக, கேம்ஆன் & ஆஸ்ட்ரோடெல் (Gameon & Astrotell), கேமியம் (Gameium), ஜிங் மியூசிக் (Zing Music), வாவ் எண்டர்டெயின்மெண்ட் (WOW Entertainment), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), லிஸ்டன் பாடகாஸ்ட் (Lystn Podocast) போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்திய மக்களுக்கு இந்த BSNL திட்டம் ஒரு சூப்பர் ஜாக்பாட் திட்டமென்று கூட நாம் கூறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1999 Plan Offers 600GB Data With 365 Days Validity Unlimited Voice Calls and SMS Along Free OTT Subscriptions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X