Home
News

BSNL போட்ட போடு.. மாதம் ரூ.166 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 600GB டேட்டா.. OTT சப்ஸ்கிரிப்ஷன்!

ஓடிடி மற்றும் ஆன்லைன் கேமிங் பிரியர்களை கட்டிப்போடும் விதமாக பிஎஸ்என்எல் ரூ 1999 திட்டம் (BSNL Rs 1999 Plan) இருக்கிறது. மாதத்துக்கு ரூ.166 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டியோடு, ஓடிடி மற்றும் அன்லிமிடெட் டேட்டா வழங்குகிறது. இதுகுறித்த விவரம் இதோ.

பிஎஸ்என்எல் ரூ.1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மட்டுமல்லாமல், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. மொத்தமாக 600 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது நளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை விட அதிமாகும்.

மாதம் ரூ.166 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 600GB டேட்டா.. OTT சந்த

அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால் சலுகைகள் மற்றும் நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு வழங்கப்படும் டேட்டாவுக்கு தினசரி கணக்கீடு கிடையாது. வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு 600 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்தி விட்டாலும், 80 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படும்.

ஆகவே, ஒரு வருடத்துக்கு டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் பற்றிய கவலையே வாடிக்கையாளர்களுக்கு ஏற்படாது. இந்த சலுகைகள் போக உங்களுக்கு 30 நாட்களுக்கான ஈராஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் (Eros Now Entertainment) சப்ஸ்கிரிப்சன் வழங்கப்படுகிறது. அதோடு லோக்துன் கன்டென்ட் (Lokdhun Content) சப்ஸ்கிரிப்சனையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த திட்டத்தின் ஒரு மாதத்துக்கான பட்ஜெட்டை பார்த்தால், வெறும் ரூ.166 மட்டுமே செலவாகிறது. ஆகவே, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களில் அதிக டேட்டா மற்றும் வேலிடிட்டி தேவைப்படுவோருக்கு இந்த திட்டம் மிகுந்த லாபம் தரக்கூடியதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு 365 நாட்களுக்கு டேட்டா சலுகை மட்டுமே போதுமானால், மாதத்துக்கு ரூ.126 செலவில் அன்லிமிடெட் டேட்டா திட்டம் ஒன்று இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 1515 பிளான் விவரங்கள் (BSNL Rs 1515 Plan Details): இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகள் வழங்கப்படாது. டேட்டா சலுகை மட்டுமே கொடுக்கப்படும். இந்த திட்டத்துக்கும் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

அதோடு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த 2 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்தி விட்டாலும், ஃபேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

ஆன்லைன் கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்களுக்கு தடையில்லா டேட்டா வேண்டுமானால், இந்த திட்டம் நல்ல தேர்வாக இருக்கும். ஆனால், இந்த திட்டத்தின் பலன்களை பெற உங்களிடம் பேஸ் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் (Base Active Prepaid Plan) இருக்க வேண்டும். அதாவது, இந்த திட்டத்தை கூடுதல் டேட்டா திட்டத்தை போல பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வருட வேலிடிட்டியோடு ரூ 2,399 விலையில் மற்றொரு திட்டம் இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டியோடு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களை செய்துகொள்ள முடியும். இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது.

ஆகவே, மொத்தமாக 730 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், உங்களுக்கு ஈராஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் லோக்துன் கன்டென்ட் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. அதோடு பிஆர்பிடி (PRBT) பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த சலுகை முதல் 30 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதன்பின்பு, டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் சலுகைகள் தொடர்ந்து இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1999 Plan Offer 365 Days Validity 600GB Data OTT Benefits Check One Year Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X