Home
News

BSNL SIM காட்டில் மழை.. மாதம் ரூ.182 போதும்.. 330 நாட்கள் வேலிடிட்டி.. 11 மாசத்துக்கு அன்லிமிடெட் வாய்ஸ்!

பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே கம்மியான விலையில் வருடம் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இதனால், மற்ற டெலிகாம் கஸ்டமர்களும் செகண்டரி சிம் கார்டாக பிஎஸ்என்எல்லை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே இருக்கும் கஸ்டமர்களும் வருடாந்திர திட்டங்களையே ரீசார்ஜ் செய்கின்றனர்.

இப்படி ரீசார்ஜ் செய்ய காரணமாக மாத செலவு இருக்கிறது. மாதம் மாதம் ரீசார்ஜ் செய்தால் ஏற்படும் செலவை ஒரு வருடத்துக்கு கணக்கிட்டால், அது ஏற்கனவே கிடைக்கும் ஒரு வருட திட்டத்தைவிட அதிகமாகவே இருக்கும். ஆகவே, வருடத்துக்கு ரீசார்ஜ் செய்து மாத செலவை குறைக்கலாம். பிஎஸ்என்எல் ரூ.1999 திட்டத்தில் 330 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

BSNL SIM காட்டில் மழை.. மாதம் ரூ.182 போதும்.. 330 நாட்கள் வேலிடிட்டி!

ஆகவே, 11 மாதங்கள் வேலிடிட்டி என்று கணக்கில் எடுத்தால், ஒரு மாதத்துக்கு வெறும் ரூ.182 மட்டுமே செலவாக இருக்கிறது. இந்த கம்மியான விலைக்கே மாத வேலிடிட்டி கொண்ட திட்டத்தை தேடினால் கிடைக்காது. ஆகவேதான், பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களும் வருடாந்திர திட்டங்களை ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.1999 Prepaid Plan): 330 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது. இவ்வளவு கம்மியான விலைக்கு கிடைப்பதால், தினசரி டேட்டா கிடைக்காது என்று நினைக்க வேண்டாம். நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை கொடுக்கிறது.

உள்நாட்டு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட 4ஜி சேவையின் கீழ் இந்த டேட்டா பயன்படுத்த கிடைக்கிறது. 330 நாட்களுக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி வீதம் 495 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எல் கஸ்டமர்களால் பெற்று கொள்ள முடியும். இதுபோக 40 கேபிபிஎஸ் வேக டேட்டாவும் இருக்கிறது. மேலும், 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது.

BSNL SIM காட்டில் மழை.. மாதம் ரூ.182 போதும்.. 330 நாட்கள் வேலிடிட்டி!

இதை நாளொன்றுக்கு 330 நாட்கள் வரையில் அனுப்பி கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை இந்த பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இதேபோல மலிவான விலைக்கு பாதி விலைக்கு திட்டம் வேண்டுமானால், பிஎஸ்என்எல் ரூ.997 திட்டத்தை பெறலாம்.

பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.997 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை முந்தைய திட்டத்தின் விலையை விட பாதிக்கும் கம்மியாக இருக்கிறது. ஆனால், டேட்டாவை கூடுதலாக கொடுக்கிறது. 150 நாட்கள் வேலிடிட்டியை இந்த பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது.

இது முந்தைய திட்டத்தில் கிடைத்ததைவிட கூடுதல் டேட்டாவாக இருக்கிறது. இந்த 2 ஜிபி டேட்டா முடிந்தாலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை இந்த பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கும். 150 நாட்களில் மொத்தமாக 300 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இது முந்தைய திட்டத்தைவிட 195 ஜிபி கம்மியாக இருக்கிறது.

ஆனால், விலை ரூ.1000 மேல் குறைகிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை இந்த பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டமும் கொடுக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. மேலும், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது மொபைல் நம்பரை பகிராமல் ரீசார்ஜ் செய்யும் வசதியை கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் கவாச் (BSNL Kavach) என்கிற வசதி வழியாக மொபைல் எண்ணை பகிராமல் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இது விர்ச்சுவல் நம்பரை உருவாக்கி அதன் வழியாக ரீசார்ஜ் செய்து கொள்ளும் முறையாக இருக்கிறது. பிஎஸ்என்எல் செல்ப் கேர் ஆப் வழியாக இப்படி விர்ச்சுவல் நம்பரை உருவாக்கி கொள்ளலாம். இதனால் ஒரிஜினல் நம்பரை பகிர வேண்டியது கிடையாது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 1999 Plan Get 330 Days Validity Unlimited Voice Calls Check Year Long Validity Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X