Home
News

BSNL தான் சூப்பர்.. மொத்தமா 600GB டேட்டா தரும் பிளான்.. தினமும் ரூ.5 போதும்.. 365 நாள் ஜமாய்க்கலாம்..

பிஎஸ்என்எல் (BSNL) என்று அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தான் இந்தியாவிலேயே சூப்பர் டெலிகாம் நிறுவனம் என்று மக்கள் பாராட்டும் அளவிற்கு, குறைந்த விலையில் ஒரே பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (voice calls), 600GB டேட்டா (data), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் 365 நாள் வேலிடிட்டியை (validity) வழங்கி அசத்தியுள்ளது. இதுவரை ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற இந்தியாவில் உள்ள எந்தவொரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமும் வழங்காத நன்மையை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தினசரி 5 ரூபாய் கட்டணத்துடன் இ முழு வருடத்திற்கு செல்லுபடியாகும் மலிவு விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த் திட்டத்தை நிறுவனம் பிஎஸ்என்எல் ரூ. 1999 திட்டம் (BSNL Rs 1999 Plan) என்று இந்தியாவின் பல வட்டங்களில் வழங்க துவங்கியுள்ளது. குறைந்த விலையில் நீண்ட நாள் வேலிடிட்டி மற்றும் நீண்ட நாள் நன்மைகளை விரும்பும் வடிக்கையாளர்களுக்காக BSNL இந்த திட்டத்தை வழங்க துவங்கியுள்ளது.

BSNL தான் சூப்பர்.. மொத்தமா 600GB டேட்டா தரும் பிளான்.. ரூ.5 போதும்..

BSNL தான் சூப்பர்.. மொத்தமா 600GB டேட்டா தரும் பிளான்.. தினமும் ரூ.5 போதும்:

இந்த திட்டம் 1 வருடத்திற்கு முழுமையாக செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மை கொண்டுள்ளது. அதாவது முழுமையாக ஒரு ஆண்டிற்கான 365 நாட்களுக்கு உங்களை தொலைத்தொடர்பு சேவையுடன் இணைப்பில் வைத்திருக்க இந்த திட்டம் அனுமதிக்கிறது. ஒரு வருடத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும் என்ற, டென்ஷன் ஃப்ரீ ரீசார்ஜ் பிளானாகவும் இந்த திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பு இத்துடன் கிடைக்கும் 600GB டேட்டா நன்மையாகும்.

ஆம், இந்த திட்டம் தினசரி வரம்பில்லாமல் முழுமையாக 600GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இதன் பொருள், இந்த திட்டத்தின் 600GB டேட்டாவை உங்கள் இஷ்டம் போல பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டத்துடன் கிடைக்கும் 600GB டேட்டா நன்மை முடிந்த பிறகு, இதன் இணைய வேகம் 40Kbps ஆக குறைக்கப்பட்டு அன்லிமிடெட் டேட்டா நன்மையாக (unlimited data) வழங்கப்படும்.

பிஎஸ்என்எல் ரூ. 1999 திட்டம் (BSNL Rs 1999 Plan):

இத்துடன் உங்களுக்கு 365 நாட்களுக்கு தடையில்லா அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls benefits) நன்மையும் கிடைக்கிறது. இந்த திட்டம் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ் நன்மையை தாண்டி, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் வழங்குகிறது. கூடுதல் இலவச நன்மையாக, இந்த BSNL 1999 Plan உடன் OTT தளங்களுக்கான இலவச நன்மைகளையும் (BSNL free benefits) சேர்த்து வழங்குகிறது.

பிஎஸ்என்எல் 1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL 1999 Prepaid Plan) 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் EROS NOW Entertainment சந்தாவை வழங்குகிறது. ஈரோஸ் நொவ் எண்டெர்டைன்மெண்ட் மூலம் பயனர்கள் பல டிவி உள்ளடக்கங்கள், திரைப்படங்கள் மற்றும் சில ஆன்லைன் நிகழ்ச்சிகளை கண்டு மகிழலாம். இந்த பிஎஸ்என்எல் திட்டம் (BSNL Plan), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), சேலஞ்சர் அரினா (Challenger Arena) போன்ற இலவச நன்மைகளை வழங்குகிறது.

இத்துடன் கூடுதல் சேர்ப்பாக, கேம்ஆன் & ஆஸ்ட்ரோடெல் (Gameon & Astrotell), கேமியம் (Gameium), ஜிங் மியூசிக் (Zing Music), வாவ் எண்டர்டெயின்மெண்ட் (WOW Entertainment), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), லிஸ்டன் பாடகாஸ்ட் (Lystn Podocast) போன்ற நன்மைகளை வழங்குகிறது. வெறும் 5 ரூபாய் செலவில் தினமும் உங்களுக்கு இத்தனை நன்மைகள் தொடர்ந்து 1 வருடம் முழுக்க கிடைக்குமென்றால், இதை விட சூப்பர் திட்டம் இந்தியாவில் கிடைக்குமா? நீங்களே சொல்லுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1999 Plan With 600 GB Data Unlimited Voice Calling 100 SMS Daily Under Rs 5 For 365 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X