BSNL ருத்ர தாண்டவம்.. அடுத்த 6 மாசத்துக்கு வாய்ஸ் கால்கள்.. 40 எம்பிபிஎஸ் டேட்டா.. வெறும் ரூ.1,999 போதும்!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் கொடுக்க முடியாத வேலிடிட்டியை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுத்து வருகிறது. பிராட்பேண்ட் திட்டத்தில் (Broadband Plan) டேட்டா, வாய்ஸ் கால்களை 6 மாதங்களுக்கு கொடுத்தும் அதன் விலையை ரூ.1,999 ஆக மட்டுமே வைத்து இருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு உள்நாட்டு தொழில்நுட்பம், டவர்கள் மேம்பாடு, ப்ராட்பேண்ட் கஸ்டமர்களுக்கு லைவ் டிவி சேனல்கள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு கொடுத்து வருகிறது. இதனால், கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பிராட்பேண்ட் திட்டங்கள் நம்ப முடியாத விலைகுக்கு கிடைக்கின்றன.

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் கஸ்டமர்களுக்கு ரூ.1999 விலைக்கே 6 மாதங்களுக்கு டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் கிடைக்கின்றன. ஆனால், இதை எல்லா கஸ்டமர்களும் பெற்று கொள்ள முடியாது. கிராமப் புறங்களில் இருக்கும் கஸ்டமர்கள் மட்டுமே பெற்று கொள்ள முடியும். அதே நேரத்தில் வியாபார ரீதியாக இந்த விலைக்கு பெற்று கொள்ள முடியாது.
தனி நபர்கள் பெற்று கொள்ளலாம். அதாவது, வீடுகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவைகள் கிடைக்கும் கிராப்புறங்களில் இந்த திட்டம் கிடைக்கும். சொல்லப் போனால், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கொடுக்காத கிராமப் புறங்களிலும் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவைகள் கொடுக்கப்பட்டுகின்றன.
பிஎஸ்என்எல் ரூ.1,999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 6 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். இந்த மாதங்கள் முழுவதும் 40 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இப்படி 1,400 ஜிபி டேட்டா வரையில் பயன்படுத்தி கொள்ளலாம். பிறகு 4 எம்பிபிஎஸ் வேகத்தில் பயன்படுத்தலாம்.
எப்படி பார்த்தாலும் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், பிராட்பேண்ட் வழியாக வாய்ஸ் கால்களை செய்து கொள்ளும் கஸ்டமர்களுக்கும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி கால்கள் கொடுக்கப்படுகின்றன. ஆகவே, டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களுக்கு ஏற்ற மலிவு விலை திட்டமாகவும் இந்த பிராட்பேண்ட் திட்டம் இருக்கிறது.
இந்த டேட்டா வேகம் போதாது, அதேபோல கிராமப்புறங்கள் மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களிலும் சேவை கொடுக்கப்படியான 6 மாத திட்டம் வேண்டுமானால், பிஎஸ்என்எல் ரூ.7,794 விலை கொண்ட பிராட்பேண்ட் திட்டத்துக்கு செல்லலாம். இந்த விலை அதிகம் போல தோன்றாலாம். ஆனால், 250 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ.7,794 திட்ட விவரங்கள் (BSNL Rs 7,794 Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டத்துக்கும் 6 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த மாதங்கள் முழுவதும் 250 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த வேகத்தில் 6000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த லிமிட்டுக்கு பிறகு 15 எம்பிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா கொடுக்கப்படும்.
முந்தைய திட்டத்தில் பார்த்த அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி கால்களையும் இந்த திட்டத்தில் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தை கிராமப்புறங்களில் இருக்கும் கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பிராட்பேண்ட் கஸ்டமர்களும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டங்களில் கிடைக்கும் டேட்டா வேகத்துக்கு ஏற்ப ஆப்ஷனில் எடுக்கலாம். இதுபோன்ற டெலிகாம் செய்திகளுக்கு கிஸ்பாட் தளத்தில் பின் தொடருங்கள்.


Click it and Unblock the Notifications