சரியான நேரத்தில் ரூ.199 திட்டத்தை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல்.! பலே வேலிடிட்டி, அதிக டேட்டா நன்மைகள்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகளை வழங்கிவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்த நிலையில் கிறிஸ்மஸ் 2020 க்கு முன்னதாக
பிஎஸ்என்எல் ரூ.199-க்கு ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இன்னமும் பிஎஸ்என்எல் மலிவு விலையில் சிறப்பான திட்டங்களை வழங்கிவருகிறது. குறிப்பாக தனியார் டெலிகாம் நிறுவனங்கள் பிஎஸ்என்எஎல்-ஐ விட குறைந்தது 25 சதவிகிதம் அதிகமாக வசூலிக்கின்றன.

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.199 புதிய திட்டத்தை அறிவிப்பதோடு, பி.வி.186 அகற்றப்படுவதையும் உறுதிபடுத்தியுள்ளது, இது ஒரு நாளை 2ஜிபி அளவிலான டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்கியது. குறிப்பாக ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது பி.வி 186 திட்டத்திற்கு பதிலாக அறிமுகமாகி உள்ளது என்றே கூறலாம். மேலும் இது இரண்டு நாட்களுக்கு கூடுதலாக செல்லுபடியாகும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட பி.வி. 199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தனசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்கிற வரம்பின் கீழ் எந்த நெட்வொர்க் உடனும் குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
அதேபோல் 2020 கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தொடங்கப்பட்டதால், டிசம்பர் 24, 2020 முதல் இது அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புதிய ரூ.199 திட்டம் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வருவதால் கண்டிப்பாக அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.998 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா வழங்கும்படி ரூ.998 திட்டத்தையும் அப்டேட் செய்துள்ளது. அதன்படி இந்த புதிய ரூ.199 திட்டம் மற்றும் திருத்தப்பட்ட ரூ.998 திட்டம் ஆகிய இரண்டும் 2020 டிசம்பர் 24 முதல் அமலுக்கு வரும் என்று கேரளா டெலிகாம் வலைதளம் தெரிவித்துள்ளது என்பபது குறிப்பிடத்தக்கது.

அப்டேட் செய்யப்பட்ட பிஎஸ்என்எல் ரூ.998 திட்டம் : என்னென்ன நன்மைகளை வழங்குகிறது?
அதாவது பிஎஸ்என்எல் ரூ.998 ப்ரீபெய்ட் திட்டம் திருத்தப்பட்டுள்ளது. பின்பு இது 2020 டிசம்பர் 24 முதல் ஒரு நாளைக்கு 3ஜிபி அளவிலான டேட்டாவை வழங்க உள்ளது. தற்சமயம் இந்த திட்டம் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை மட்டும் வழங்குகிறது. இந்த திட்டம் டிசம்பர் 24-ஆம் தேதி முதல் திருத்தப்படும். பின்பு பின்னர் மார்ச் 23, 2021 அன்று அதன் பழைய நன்மைகளுக்குத் திரும்பும். ஏனெனில் பிஎஸ்என்எல் இந்த மாற்றத்தை ஒரு விளம்பர அடிப்படையிலேயே நிகழ்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ரூ.998 திட்டத்தின் வேலிடிட்டி 240 நாட்கள் அகும். இது 60 நாட்களுக்கான பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தாவுடன் வரும் டேட்டா ஒன்லி திட்டமாகும். மேலும் திருத்தத்திற்குப் பிறகு, பிஎஸ்என்எல்லின் ரூ.998 ரீசார்ஜ் 720ஜிபி அளவிலான மொத்த டேட்டாவை வழங்குகிறது. முன்பு இது 480ஜிபி அளவிலான டேட்டாவை மட்டும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications