BSNL Vs BSNL.. ரூ.199 க்கு கிடைக்கும் 2 திட்டங்கள்.. எதில் 56GB கிடைக்கும்? எது 25GB கொடுக்கும்?
இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) என்கிற பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ஆனது, அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை காட்டிலும், மிகவும் மலிவான விலைக்கு தொடக்க நிலை போஸ்ட்பெய்ட் திட்டத்தை (Cheapest entry-level postpaid plan) வழங்குகிறது. அது ரூ.199 ஆகும்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் - பிஎஸ்என்எல் நிறுவனமானது ரூ.199-க்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மற்றும் போஸ்ட்பெய்ட் பில் திட்டம் ஆகிய இரண்டையும் வழங்குகிறது. இரண்டு பிரிவுகளின் கீழும் கிடைக்கும் நன்மைகளை பார்த்து, மதிப்பின் அடிப்படையில் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதை நீங்கள் எளிமையாக தீர்மானிக்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்:
பேக் வகை: பிளான் வவுச்சர் (ரீசார்ஜ்)
முக்கிய நன்மைகள்: வரம்பற்ற வாய்ஸ் கால்கள், வரம்பற்ற டேட்டா (அதிவேகத்தில் ஒரு நாளைக்கு 2ஜிபி, அதன் பிறகு வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்; மொத்தம் 56ஜிபி டேட்டா) மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்
சர்வீஸ் வேலிடிட்டி: 28 நாட்கள்
ஒரு நாளுக்கான செலவு: தோராயமாக ரூ.7.11
பிஎஸ்என்எல் ரூ.199 போஸ்ட்பெய்ட் பில் பிளான்:
பேக் வகை: தனிநபர் திட்டம், போஸ்ட்பெய்ட் திட்டம்
முக்கிய நன்மைகள்: 25ஜிபி டேட்டா (75ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் அனுமதிக்கப்படுகிறது), வரம்பற்ற வாய்ஸ் காலிங் (ஹோம் எல்எஸ்ஏ-வில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் மற்றும் எம்டிஎன்எல் நெட்வொர்க்கில் மும்பை, டெல்லி உட்பட நேஷனல் ரோமிங்), மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்
வரம்பிற்கு அப்பாற்பட்ட டேட்டா: 1 எம்பிக்கு 1 பைசா கட்டணம்
பேமிலி கனெக்ஷன் : இல்லை
சர்வீஸ் வேலிடிட்டி: பில் சைக்கிள்
சந்தாக்கள் மற்றும் நன்மைகள்: கூடுதல் மூன்றாம் தரப்பு ஸ்ட்ரீமிங் அல்லது கிளவுட் சந்தாக்கள் எதுவும் இல்லை
ஒரு நாளுக்கான பயனுள்ள விலை: ரூ.6.63
இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் பிஎஸ்என்எல் ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் அடிப்படை திட்ட விலை ரூ.199 ஆகும். ஆனால் இதற்கு ஜிஎஸ்டி (18%) உண்டு. அது ரூ.35.82 ஆகும். ஆக மொத்த மாத பில் ரூ.234.82 (தோராயமாக ரூ.235) ஆகும். இதையும் சேர்த்தால் ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கான ஒரு நாள் கட்டணம் தோராயமாக ரூ.7.83 ஆகும்.
ஒப்பீடுகள் ஒருபக்கம் இருக்க பிஎஸ்என்எல் திட்டங்களின் விலைகள் விரைவில் உயர்த்தப்படவும் வாய்ப்புள்ளது. பிஎஸ்என்எல் எப்போதுமே நேரடி கட்டண உயர்வுகளை தவிர்த்து வந்துள்ளது. ஜியோ, ஏர்டெல் , வோடாபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆனது தங்கள் திட்டங்கள் அனைத்திலும் கட்டணங்களை உயர்த்தும் சுழற்சிகளை கொண்டிருக்கும் வேளையில், பிஎஸ்என்எல் அதை செய்வதற்கு ஒரு வித்தியாசமான வழியை கொண்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான இந்த தொலைத்தொடர்பு நிறுவனம், கட்டணங்களை நேரடியாக உயர்த்தி, அதன் பலன்களை அப்படியே வைத்திருப்பதற்கு பதிலாக, காலப்போக்கில் பல திட்டங்களின் பலன்களை குறைப்பதன் மூலம் மறைமுகமாக கட்டணங்களை உயர்த்துகிறது. இது பொதுவாக, பயனர்கள் தாங்கள் சேவைகளுக்கு அதே தொகையை செலுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் உள்ள வளங்களோ அல்லது நெட்வொர்க் ஆதரவோ /உள்கட்டமைப்போ பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இல்லாத நிலையில், இது ஒரு மோசமான உத்தி அல்ல. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 2027 நிதியாண்டில் அதன் கட்டணங்களை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் இந்நிறுவனம் 2027 நிதியாண்டில், ஏஆர்பியு (ARPU) என்கிற ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி வருவாயை (Average Revenue Per User) 50% உயர்த்த விரும்புகிறது.
பிஎஸ்என்எல்-இன் தற்போதைய - ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி வருவாய் ரூ.101 ஆகும் (இந்த மே மாதம் கிடைத்த தரவுகளின் படி). இது 2026 நிதியாண்டின் இறுதியில் இருந்த நிலை. வருகிற 2027 நிதியாண்டில் இது ரூ.150-ஐ எட்ட வேண்டும் என்று பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் ""தலையிலும்" ரூ.49-ஐ அதிகம் ஏற்ற வேண்டும் என்கிற திட்டத்தை கொண்டுள்ளது. நேரடி அல்லது மேற்குறிப்பிட்ட மறைமுகமான விலை உயர்வு இல்லாமல் இது சாத்தியம் இல்லை.


Click it and Unblock the Notifications