பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்.. என்னென்ன நன்மைகள்? எத்தனை நாட்கள் வேலிடிட்டி?
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக இப்போதும் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். எனவே தான் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்யப் பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது இந்நிறுவனம் மலிவு விலையில் அதிக நன்மைகள் வழங்கும் திட்டம் ஒன்றை வைத்துள்ளது. அந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.199 prepaid plan) தான் அதிக நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதுவும் பிஎஸ்என்எல் ரூ.199 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் இவ்வளவு கம்மி விலையில் பிஎஸ்என்எல் போன்று சலுகைகள் வழங்குவதில்லை. குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.199 திட்டம் அதிக நன்மைகள் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரூ.2026 மற்றும் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.2626 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2626 Prepaid Plan) தினமும் 2.6ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.2626 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 949ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.6ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2626 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2799 Prepaid Plan) ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். ஆகவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும்.
அதுவும் பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications