Home
News

ஜியோவுடன் நேரடி போட்டியில் இறங்கிய BSNL.. ரூ.199 போஸ்ட்பெய்டு திட்டத்தின் மூலம் ஜியோவுக்கு பதிலடி..

இந்தியாவில் ஜியோ நிறுவனம் முன்னணி டெலிகாம் நிறுவனமாகத் திகழ்கிறது, இதற்கான முக்கிய காரணம் மலிவு விலையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் நன்மையை நிறுவனம் வழங்கிவருவது தான். அரசாங்கத்திற்குச் சொந்தமான BSNL நிறுவனமும் குறைந்த விலையில் பல திட்டங்களை வைத்துள்ளது. இருப்பினும் ஜியோவையே மக்கள் நாடுகின்றனர். மக்களின் கவனத்தைத் தன்பக்கம் திருப்ப, BSNL அதன் போஸ்ட்பெய்டு திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.

ஜியோவுக்கு போட்டியாக BSNL

ஜியோவுக்கு போட்டியாக BSNL

ஜியோவுக்கு போட்டியாக BSNL நிறுவனமும் தனது டேட்டா நன்மை மற்றும் வாய்ஸ் கால் நன்மையை, அதன் பயனர்களுக்கு வாரிவழங்குவதற்கு முடிவு செய்துவிட்டது. BSNL நிறுவனம் அதன் போஸ்ட்பெய்டு பட்டியலில் உள்ள ரூ.199 திட்டத்தில் சில அருமையான மாற்றங்களைச் செய்து மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது. இதன் மூலம் ஜியோவுடன் சரிக்குச் சமமான போட்டியில் BSNL களமிறங்கியுள்ளது.

ரூ.199 போஸ்ட்பெய்டு திட்டம்

ரூ.199 போஸ்ட்பெய்டு திட்டம்

BSNL நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.199 போஸ்ட்பெய்டு திட்டத்தை ஒரு முறை ரிவைஸ் செய்தது. இப்போது மீண்டும் ஒரு முறை இந்த திட்டத்தை நிறுவனம் ரிவைஸ் செய்துள்ளது. முன்பு இந்த திட்டம் ரிவைஸ் செய்யப்பட்ட போது இத்திட்டத்தில் 25ஜிபி டேட்டா நன்மை மற்றும் ஆன்-நெட் அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் ஆப்-நெட் அழைப்புகளுக்காக மாதம் தோறும் 300 நிமிடம் மற்றும் தினமும் 100 SMS நன்மைகளை மட்டுமே நிறுவனம் வழங்கி வந்தது.

ரிவைஸ் செய்யப்பட்ட நன்மைகள்

ரிவைஸ் செய்யப்பட்ட நன்மைகள்

இப்போது, நிறுவனம் இத்திட்டத்தை ரிவைஸ் செய்து ஜியோ போன்ற அன்லிமிடெட் அழைப்பு நன்மையைத் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது. ஆம், பிப்ரவரி 1ம் தேதி முதல் ரூ.199 போஸ்ட்பெய்டு திட்டப் பயனர்களுக்கு 25ஜிபி டேட்டா நன்மை, தினமும் 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கான அன்லிமிடெட் அழைப்பு நன்மை ஆகிய வற்றை BSNL தற்பொழுது வழங்கிவருகிறது.

ஜியோவில் கிடைக்காத நன்மையை வழங்கி BSNL பதிலடி

ஜியோவில் கிடைக்காத நன்மையை வழங்கி BSNL பதிலடி

இத்துடன், ஜியோவை ஒரு படி முந்தும் வகையில் BSNL நிறுவனம் டேட்டா ரோல் ஓவர் நன்மையையும் இத்திட்டத்துடன் சேர்த்துள்ளது. மேல் குறிப்பிட்ட நன்மைகளுடன் 75 ஜிபி வரையிலான டேட்டா ரோல் ஓவர் நன்மையையும் இனி இந்த திட்டத்தைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும். ஜியோவில் டேட்டா ரோல் ஓவர் இல்லை என்றாலும் கூட, ஜியோவின் கூடுதல் நன்மையாக ஜியோ டிவி போன்ற நன்மைகள் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெஸ்டான பேசிக் நன்மைகள்

பெஸ்டான பேசிக் நன்மைகள்

எது எப்படியாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் கம்மி விலையில் பேசிக் திட்டங்களைத் தேர்வு செய்யும் பொழுது அதில் பேசிக் நன்மைகள் பெஸ்டாக இருக்கிறதா என்பதை மட்டுமே கவனிக்கின்றனர். அந்த வகையில் BSNL நிறுவனம் அதன் ரூ.199 போஸ்ட்பெய்டு திட்டத்தின் பேசிக் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் நன்மையை ஜியோ போன்றே பெஸ்டாக மாற்றியதால் கூடுதல் வாடிக்கையாளர்களை நிறுவனம் வரும் மாதத்தில் பெரும் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 199 Postpaid Plan Revised With Truly Unlimited Calling Benefit To Takes On Reliance Jio : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X