BSNL ஒரே போடு.. ரூ.199-க்கு 30 நாட்கள்.. 2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. அடிமட்ட விலை மாதாந்திர திட்டம்!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியாவில் (Vodafone Idea) 28 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் வேண்டுமானால், அந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.299-க்கு மேல் இருக்கும். ஆனால், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, வெறும் ரூ.199 விலைக்கு கொடுக்கிறது. அதுவும் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கொடுக்கிறது. இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் (BSNL Prepaid Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய டெலிகாம் மார்கெட்டில் அடிமட்ட விலைக்கு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை பிஎஸ்என்எல் மட்டுமே கொடுக்கிறது. இந்த விலைக்கு கொடுப்பதற்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது மட்டும் காரணமல்ல, தனியார் டெலிகாம் நிறுவனங்களை போல நாடு முழுவதும் 4ஜி மற்றும் 5ஜி வேகத்தில் டேட்டா சேவையை கொடுக்காததும்தான்.

இருப்பினும், வாய்ஸ் கால்களை மட்டுமே எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு பிஎஸ்என்எல்லை விட வேறு பெஸ்ட் ஆப்ஷன் இருக்காது. அதே நேரத்தில், எங்கெல்லாம் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்கிறதோ அங்கெல்லாம் இருக்கும் கஸ்டமர்களுக்கு அதிகப்படியான லாபத்துடன் டேட்டா வேகமும் கிடைக்கின்றன. இப்படித்தான் பிஎஸ்என்எல் ரூ 199 திட்டம் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 199 திட்ட விவரங்கள் (BSNL Rs 199 Plan Details): இந்த விலைக்கு மற்ற நிறுவனங்களில் இதுபோன்ற சலுகைகள் கிடைக்காது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் ஃபேர் யூசேஜ் பாலிசி சலுகையின் கீழ் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. இது தினசரி டேட்டா முடிந்த பிறகு கிடைக்கும்.
இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு மொத்தமாக 60 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) அனைத்து நெட்வொர்க்குக்கும் செய்து கொள்ளலாம். இதில் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் கால்களும் (National Roaming Calls) அடங்குகிறது.
டேட்டாவை போலவே நாளொன்றுக்கு என்னும் கணக்கில் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. ஆகவே, பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் ஒரு மாதத்துக்கு பெஸ்ட்டான ப்ரீபெய்ட் திட்டத்தை தேடிக் கொண்டிருந்தால், இந்த ரூ.199 மதிப்பிலான திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 2 ஜிபி டேட்டா வேண்டாம், வாய்ஸ் கால்கள் போதும் என்றால் மற்றொரு திட்டம் இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 147 திட்ட விவரங்கள் (BSNL Rs 147 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள் அன்லிமிடெட் சலுகையில் கொடுக்கப்படும். ஆனால், டேட்டா சலுகையானது லம்ப்-சம் (Lump-sum) சலுகையில் கொடுக்கப்படும். இருப்பினும், வேலிடிட்டியானது முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போல 30 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. இதே 30 நாட்களுக்கு 10 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இது தினசரி லிமிட் டேட்டா கிடையாது. மொத்த வேலிடிட்டிக்கும் கிடைக்கும் லம்ப்-சம் டேட்டா சலுகையாகும்.
இருப்பினும், 10 ஜிபிக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. ஆனால், எஸ்எம்எஸ் சலுகைகளை இந்த திட்டம் கொடுக்காது. ஆகவே, வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே அடிமட்ட விலைக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பினால், இந்த திட்டத்துக்கு செல்லலாம். இந்த விலைக்கு வாய்ஸ் கால்களை மட்டுமே கொடுக்கும் திட்டங்கள் தனியார் டெலிகாம் நிறுவனங்களிடம் இல்லை.


Click it and Unblock the Notifications