Home
News

BSNL போட்ட போடு.. வெறும் ரூ.199 போதும்.. 30 நாட்கள் வேலிடிட்டி.. 2GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்களைவிட ரூ.199 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிகப்படியான சலுகைகளை பிஎஸ்என்எல் (BSNL) வழங்குகிறது. இந்த விலையில் நான்கு நிறுவனங்களும் கொடுக்கும் சலுகை விவரங்கள் இதோ.

பிஎஸ்என்எல் ரூ 199 திட்ட விவரங்கள் (BSNL Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 60 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும்.

ரூ.199 போதும்.. 30 நாட்கள் வேலிடிட்டி.. 2GB டேட்டா..  வாய்ஸ் கால்கள்!

இந்த தினசரி டேட்டா 2 ஜிபியை முழுவதும் பயன்படுத்திவிட்டாலும், ஃபேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 199 திட்ட விவரங்கள் (Airtel Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இருப்பினும், தினசரி டேட்டா சலுகை கிடையாது. மொத்தமாக 3 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

ரூ.199 போதும்.. 30 நாட்கள் வேலிடிட்டி.. 2GB டேட்டா..  வாய்ஸ் கால்கள்!

அதோடு அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக ரூ.5 மதிப்பில் டாக்டைம் வழங்கப்படுகிறது. மேலும், ப்ரீ ஹாலோ டியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) இரண்டையும் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த திட்டத்தில் ஃபேர் யூசேஜ் பாலிடி கிடையாது.

வோடபோன் ஐடியா ரூ 199 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 199 Plan Details): இந்த திட்டத்திலும் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 18 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

ரூ.199 போதும்.. 30 நாட்கள் வேலிடிட்டி.. 2GB டேட்டா..  வாய்ஸ் கால்கள்!

இந்த 1 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டி கால்களை செய்துகொள்ளலாம். இந்த சலுகைகள் போக விஐ மூவிஸ் மற்றும் டிவி பேஸிக் (Vi Movies & TV Basic) சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 18 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது.

ஜியோ ரூ 199 திட்ட விவரங்கள் (Jio Rs 199 Plan Details): இந்த திட்டத்துக்கு 23 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களின் தினசரி 1.5 ஜிபி வீதம் மொத்தமாக 34.5 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு 100 எஸ்எம்எஸ்களை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஃபேர் யூசேஜ் பாலிசி வருகிறது.

ரூ.199 போதும்.. 30 நாட்கள் வேலிடிட்டி.. 2GB டேட்டா..  வாய்ஸ் கால்கள்!

ஆகவே, வாடிக்கையாளர்கள் 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். முந்தைய திட்டங்களை போலவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

ரூ.199 விலை கொண்ட இந்த நான்கு திட்டங்களும் பிரத்யேக சலுகைகளையே கொண்டுள்ளன. அதாவது, பிஎஸ்என்எல்லின் டேட்டா முதல் வேலிடிட்டி வரை அதிகப்படியான சலுகை கிடைக்கிறது. ஆனால், இன்டர்நெட் வேகம் குறைவாக இருக்கும். அதேபோல ஏர்டெல், வோடபோன், ஜியோவில் டேட்டா வேகம் நன்றாக இருப்பினும் சலுகைகள் குறைவாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 199 Plan With 30 Days Validity, 2GB Data, Unlimited Voice Calling Check Prepaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X