Home
News

BSNL சிம் குடுங்க.. 4G-க்கு மாத்துங்க.. அவசர அவசரமாக ரூ.199 ரீசார்ஜ்.. வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு கிடைத்துவந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 2.5 சதவீத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதனால், மேலும் அடிமட்ட விலைக்கு கிடைக்கும் அந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily SMS) மற்றும் தினசரி எஸ்எம்எஸ்கள் (Daily SMS) கிடைக்கிறது. இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு சலுகைகள் மற்றும் தள்ளுபடி குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 199 திட்ட விவரங்கள் (BSNL Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த விலைக்கு மற்ற நிறுவனங்களில் லம்ப்-சம் டேட்டா மட்டுமே கிடைக்கும். ஆனால், இதில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை (Post Data) கொடுக்கப்படுகிறது.

BSNL சிம் குடுங்க.. 4G-க்கு மாத்துங்க.. அவசர அவசரமாக ரூ.199 ரீசார்ஜ்!

ஆகவே, 56 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இந்த திட்டத்தின் விலையில் 2.5 சதவீத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, இந்த திட்டத்தில் ரூ.199 விலையில் இருந்து கிட்டத்தட்ட ரூ.5 டிஸ்கவுண்ட் செய்யப்படும். ஆகவே, ரூ.194 விலைக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெற்று கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட் அக்டோபர் 18ஆம் தேதி முதலே கொடுக்கப்பட தொடங்கிவிட்டது. வருகிற நவம்பர் 18ஆம் தேதி வரையில் கொடுக்கப்பட இருக்கிறது. ஆகவே, இந்த தேதிக்குள் ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

இந்த ரூ.199 திட்டமும் 4ஜி வேகத்தில் டேட்டா சேவையை கொடுக்கிறது. பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்கள் 4ஜி வேகத்திலேயே டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த விலையை ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவுடன் ஒப்பிடுகையில், இதுவே மலிவாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இப்போது, டிஸ்கவுண்ட் கூடுதலாக கிடைக்கிறது.

முன்னதாக பிஎஸ்என்எல் நிறுவனம் புதியாக பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டுகளை வாங்கு கஸ்டமர்களுக்கு ரூ.1 விலை கொண்ட திட்டத்தை களமிறக்கியது. இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படுகிறது. மேலும், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டியும் கொடுக்கப்படுகிறது.

இதனால் புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு (New BSNL SIM Card) விற்பனை சக்கைப்போடு போட்டது. இந்த நேரத்தில் அடுத்த சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் களமிறக்கியது. அதாவது, புதிய சிம் கார்டு வாங்கும் கஸ்டமர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட கஸ்டமர்கள் இருந்தால், அவர்களுக்கு மட்டும் மலிவான விலைக்கு வருடாந்திர திட்டத்தை (Yearly Plan) கொடுக்க தொடங்கியது.

அதாவது, பழைய கஸ்டமர்களுக்கு ரூ.2399 விலைக்கு கிடைக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தின் சலுகைகளை வெறும் ரூ.1812 விலைக்கு கொடுக்கிறது. இந்த விலைக்கு 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.

அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் கிடைக்கிறது. இதுபோக கூடுதலாக பிஐடிவி பிரீமியம் (BiTV Premium) சந்தாவையும் கொடுக்கிறது. இந்த பிஐடிவி பிரீமியம் சந்தா மூலம் 25+ ஓடிடி ஆப்கள் மற்றும் 450+ லைவ் டிவி சேனல்களை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 199 Plan With 28 Days Validity Unlimited Voice Calls 2GB Data Check BSNL Discount Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X