BSNL வேற மாதிரி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. தினமும் 2 ஜிபி டேட்டா.. 30 நாட்களுக்கு இனிமே இதுதான் ரேட்டு.. 2 ஆப்ஷன்!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் ஒரு மாதத்துக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா (2GB Data) மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய சலுகைகளை கொடுக்கும்படி 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) மலிவான விலைக்கு கிடைக்கின்றன. ஆனால், ஒன்று 30 நாட்கள் வேலிடிட்டி மற்றொன்று காலண்டர் மாத வேலிடிட்டி கொடுக்கிறது. இதில் எதை ரீசார்ஜ் செய்ய வேண்டும்?
இப்போது, பிஎஸ்என்எல் ரூ 199 திட்டம் (BSNL Rs 199 Plan) மற்றும் பிஎஸ்என்எல் ரூ 229 திட்டம் (BSNL Rs 229 Plan) ஆகிய திட்டங்களையே தெரிந்து கொள்ள போகிறோம். இந்த திட்டங்களுக்கு விலை மற்றும் வேலிடிட்டியில் மட்டுமே மாற்றங்கள் இருக்கின்றன. டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்களில் எந்தவித மாற்றமும் இல்லை. 1 நாட்கள் வேலிடிட்டியில் இது மாறுபடுகிறது.

அதற்கு முதலில் திட்டங்களின் முழு சலுகைகளை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், 30 நாட்கள் வேலிடிட்டி பொதுவாக இருக்கிறது. ஆனால், 31 நாட்கள் கொண்ட மாதத்தின் போது மட்டுமே பிஎஸ்என்எல் ரூ 229 திட்டம் ரீசார்ஜ் செய்ய சரியாக இருக்கிறது. அதுவே 30 நாட்கள் கொண்ட மாதமாக இருந்தால், அனைத்தும் ஒரே மாதிரியான சலுகைகளையே கொடுக்கின்றன.
பிஎஸ்என்எல் ரூ 199 திட்ட சலுகைகள்: முன்பே சொன்னதை போல இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, இந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 60 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இருப்பினும், தினசரி லிமிட் முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பெறலாம்.
உண்மையில் டேட்டா சலுகை அதிகமாகவே இருக்கிறது. ஏனென்றால், 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையுடன் மற்ற நிறுவனங்களில் இந்த விலைக்கு திட்டம் கிடையாது. அதிக விலைக்கே கிடைக்கின்றன. ஆனால், பிஎஸ்என்எல்லில் மலிவான விலைக்கு இந்த 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த டேட்டாவை போலவே தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளும் சலுகை கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை 30 நாட்கள் முழுவதும் கொடுக்கிறது. இதில் அன்லிமிடெட் லோக்கல் வாய்ஸ் (Unlimited Local Voice), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் கால்களின் (National Roaming Calls) சலுகை கொடுக்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ 229 திட்ட சலுகைகள்: இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு காலண்டர் மாத வேலிடிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, நீங்கள் ரீசார்ஜ் செய்யும் அந்த தேதியில் இருந்து அடுத்த மாதம் அதே தேதி வரையில் சலுகைகள் கொடுக்கப்படும். ஆனால், இது 30 நாட்கள் கொண்ட மாதத்துக்கு முந்தைய திட்டத்தின் சலுகைகளையே கொடுக்கும்.
இந்த திட்டத்துக்கும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், முந்தைய திட்டத்தில் கிடைத்த அதே அன்லிமிடெட் லோக்கல் வாய்ஸ், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகை வருகிறது. இந்த திட்டம் ரூ 29 விலை அதிகமாக இருக்கிறது.
இது கூடுதலாக கிடைக்கும் அந்த 1 நாளுக்கான சலுகைகளுக்காக இருக்கிறது. அதாவது, காலண்டர் மாதத்தின் அடிப்படையில், 31 நாட்கள் வேலிடிட்டி பெறலாம், அந்த 1 நாளில் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகளின் அடிப்படையில் எந்த திட்டம் சரியாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








