Jio, Airtel-க்கு ஆப்பு! வந்துருச்சு சிக்கல்.. சிம் கார்டு போர்ட்டிங்.. BSNL நேரம் பாத்து வருது.. என்ன செய்வது?
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை அதிகரித்ததால், தூங்கிக் கொண்டிருந்த மிருகம் விழித்தது போல மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இதுவரையில் இல்லாத வரவேற்பு பெற்று வருகிறது. இப்போது பிஎஸ்என்எல் சிம் கார்டு போர்ட்டிங் அறக்க பறக்க தொடங்கி இருக்கிறது. மாதாந்திர செலவை கணக்கிடும் கஸ்டமர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. சிம் போர்ட், மாதாந்திர செலவு பற்றி பார்க்கலாம்.
நேரம் வந்தா எல்லாமே நடக்கும் என்பதுபோல பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மற்ற டெலிகாம் நிறுவனங்களின் விலையேற்றத்துக்கு பிறகு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளுக்கு ஒதுக்கிய நிதிக்கு பிறகு அதன் பணிகள் மும்முரமாக தொடங்கின. இப்போது, கிட்டத்தட்ட முடியப்போகிறது.

பல்வேறு மாநிலங்களில் 4ஜி சேவைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இதனால், பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் தங்களது பழைய சிம் கார்டுகளை 4ஜிக்கு மாற்றி வருகின்றனர். இந்த நேரத்தில் மற்ற டெலிகாம் நிறுவனங்களின் கஸ்டமர்களும் பிஎஸ்என்எல் சிம் வாங்குவது மட்டுமல்லாமல், சிம் கார்டு போட்டிங் செய்யவும் தொடங்கி இருக்கின்றனர்.
இப்போதே சிம் கனெக்சன் பெற்றுவிட்டால், 4ஜி சேவை வரும்போது மலிவான விலையில் திட்டங்களை பெறலாம் என்ற நிலைக்கு சென்றுவிட்டனர். இப்போது மாதத்துக்கு ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் கஸ்டமர்களுக்கு எவ்வளவு செலவாகிறது? பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை பார்ப்போம்.
ஜியோவில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் ரூ.299 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் 42 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை வருகிறது. 100 எஸ்எம்எஸ்களை நாள்தோறும் செய்து கொள்ளலாம். ஜியோ ஆப்களின் சலுகைகளை இந்த திட்டத்தில் பெற்று கொள்ள முடியும்.
ஏர்டெல் நிறுவனத்தின் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்துக்கும் ரூ.299ஆக விலை நிர்ணயம் இருக்கிறது. இந்த திட்டத்தில் 1 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு மொத்தமாக 28 ஜிபி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையும் கிடைக்கிறது. இதுபோக 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.
அதேபோல வோடபோன் ஐடியா நிறுவனமும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரூ.299 விலைக்கு வழங்குகிறது. இந்த திட்டத்திலும் 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகளை பெற்று கொள்ளலாம். அதேபோல 100 எஸ்எம்எஸ் சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இப்போது பிஎஸ்என்எல் பற்றி பார்ப்போம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பொறுத்தவரை வெறும் ரூ.199 விலைக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை வழங்குகிறது. அதுவும் 2 ஜிபி டேட்டாவை நாள்தோறும் கொடுக்கிறது. ஆகவே, 60 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. இதிலேயே சலுகை எதில் அதிகம் என்பது தெரிந்திருக்கும்.
பிஎஸ்என்எல் சிம் போர்ட் செய்வது எப்படி? மற்ற சிம் கார்டுகளில் இருந்து பிஎஸ்என்எல் சிம்முக்கு மாற முதலில் யுனிக் போர்ட்டிங் கோட் (Unique Porting Code) ரெக்கொஸ்ட் கொடுக்க வேண்டும். இதை செய்ய உங்களது மொபைலில் இருந்து 1900 என்ற எண்ணுக்கு போர்ட் (Port) என டைப் செய்து பிறகு [ஸ்பேஸ்] விட்டு உங்களின் 10 இலக்க மொபைல் நம்பரை டெப் செய்து அனுப்ப வேண்டும்.
இதை செய்த பிறகு 15 நாட்களுக்கு யுபிசி போர்ட் அவுட் செல்லுபடியாகும். இந்த நாட்களுக்குள் அருகில் இருக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு சென்று கஸ்டமர் அப்ளிகேஷன் ஃபார்ம் எழுதி கொடுத்து சிம் கார்டை மாற்றி கொள்ளலாம். இதற்காக எந்தவித கட்டணத்தையும் பிஎஸ்என்எல் நிறுவனம் விதிக்கவில்லை.


Click it and Unblock the Notifications








