BSNL தரும் ட்ரிபிள் சந்தோஷம்.. ரூ.300 விலைக்குள் மூன்று சூப்பர் BSNL ரீசார்ஜ் திட்டங்கள்.. தினசரி 3GB டேட்டா..
இந்திய தொலைத்தொடர்பு துறையில் மாபெரும் மாற்றங்களை நம்மால் தொடர்ந்து பார்க்க முடிகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் தான் இப்போது மக்களுக்கு பிடித்தமான மற்றும் நம்பிக்கையான மலிவு விலை தொலைத்தொடர்பு நிறுவனமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்களின் திடீர் விலை ஏற்றம் காரணமாக மக்கள் இப்போது மலிவு விலையில் அதிக நன்மை கிடைக்கும் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) பக்கம் மாற துவங்கியுள்ளனர். BSNL இப்போது ரூ. 300 விலைக்குள் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது.
ரூ. 300 விலைக்குள் தினசரி டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை நம்மால் பார்க்க முடியுமா என்ற சந்தேகமுள்ளவர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை பார்வையிட்டு பயன்பெறுங்கள். பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது இந்தியாவில் ரூ.300 விலைக்குள் மூன்று சிறந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வழங்குகிறது. அதன் விபரங்கள் பின்வருமாறு.

பிஎஸ்என்எல்ரூ. 199 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 199 prepaid plan):
இந்த BSNL திட்டம் தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இதில் உள்ளது. இதில் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது.
இத்துடன் கூடுதலாக, ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music) மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற சலுகைகள் இதில் கிடைக்கிறது. ரூ. 200 செலவிற்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஆகச்சிறந்த பெஸ்ட் திட்டம் இதான் என்பதில் சந்தேகமில்லை.
பிஎஸ்என்எல் ரூ.249 திட்டம் (BSNL Rs 249 prepaid plan):
இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இதில் உள்ளது. இத்துடன் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் BSNL வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ.299 திட்டம் (BSNL rs 299 prepaid plan):
இந்த திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த திட்டம் மொத்தமாக 90ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தை பயன்படுத்த முடியும். இத்துடன் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice), 100 SMS நன்மையை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








