Home
News

ரூ.200 ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்கள் வயிற்றில் அடித்த BSNL.. இனி 54 நாட்கள் தான் வேலிடிட்டி! நன்மைகள் குறைப்பு!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ரூ.400 மதிப்புள்ள ஸ்பெஷல் ரீசார்ஜ் திட்டம் (Rs.400 Special Recharge Plan) ஆனது பட்டித்தொட்டி எங்கும் பேசுபொருளாகி உள்ள மறுகையில், இந்நிறுவனம் ரூ.200 க்குள் ரீசார்ஜ் (BSNL Plan Under Rs.200) செய்ய கிடைக்கும், அதன் மிகவும் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி சத்தமின்றி குறைத்துள்ளது; கூடவே நன்மைகளையும் திருத்தியுள்ளது.

நாம் இங்கே பேசுவது ரூ.197 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs.197 Recharge Plan) ஆகும். தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி (Validity) மற்றும் நன்மைகள் (Benefits) திருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திடீர் நடவடிக்கை ஆனது, மலிவான விலையில் தத்தம் சிம் கார்டுகளை ஆக்டிவ் ஆக வைத்து இருக்க விரும்பும் பட்ஜெட் வாசிகள் மத்தியில் கவலைகளை எழுப்பியுள்ளது.

ரூ.200 ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்கள் வயிற்றில் அடித்த BSNL!

பிஎஸ்என்எல் ரூ.197 திட்டத்தின் பழைய வேலிடிட்டி மற்றும் நன்மைகள்: ரூ.197 திட்டத்தின் பழைய வேலிடிட்டி யை பொறுத்தவரை இது மொத்தம் 70 நாட்கள் செல்லுபடியாகும் படி (70 Days Validity) இருந்தது. நன்மைகளை பொறுத்தவரை முதல் 15 நாட்களுக்கு இந்த திட்டம் டெய்லி 2ஜிபி டேட்டா (Daily 2GB Data), வரம்பற்ற வாய்ஸ் காலிங் (Unlimited Voice Calling) மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் (100 SMS) ஆகியவைகளை வழங்கியது.

ஆனால் திருத்தத்திற்கு பிறகு, இப்போது ரூ.197 திட்டமானது 4ஜிபி டேட்டா (4G Data), 300 நிமிட வாய்ஸ் கால்கள் (300 Mins Voice Call) மற்றும் மொத்தம் 100 எஸ்எம்எஸ் (100 SMS) உடன் வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்களாக (54 Days Validity) குறைக்கப்பட்டுள்ளது, ஆனால் மேற்குறிப்பிட்ட நன்மைகள் ஆனது 54 நாட்கள் முழுவதும் செல்லுபடியாகும்.

மேலோட்டமாக பார்த்தால் இது மோசமான நடவடிக்கையாக தெரியலாம். ஆனால் உண்மையில் இது ஒரு நல்ல ஒப்பந்தமாகும். ரூ.197 ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் குறைக்கப்பட்டாலும், முன்னதாக கிடைத்த - முதல் 15 நாட்களுக்கு மட்டுமான நன்மைகளுக்கும், தற்போது கிடைக்கும் - மொத்தம் 54 நாட்களுக்குமான நன்மைகளுக்கும் நிச்சயமாக பெரிய வித்தியாசம் உள்ளது.

இது - ஒரு பயனருக்கு சராசரி வருவாய் (ARPU - average revenue per user) அதிகரிப்பதற்கான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வியாபார தந்திரம் என்றும் கூறலாம். தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முழு கவனமும் 4ஜி பயனர்களை சேர்ப்பதில் உள்ளது. ரூ.197 இல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் நிச்சயம் பயனர்களை ஈர்க்கக்கூடும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் "1 லட்சம் 4ஜி தளங்கள நிறைவு பெற்றது" என்கிற அறிவிப்பிற்காக அனைவரும் காத்திருக்கும் நிலையில் இப்படி ஒரு மாற்றம் வரவேற்கத்தக்க ஒன்றாகும். நினைவூட்டும் வண்ணம் ஜூன் மாதத்தில், 92000க்கும் மேற்பட்ட 4ஜி தளங்களை நிறுத்தியுள்ளதாக பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தி இருந்தது. இந்த மாத இறுதிக்குள் கடைசியாக உள்ள, அதாவது மீதமுள்ள எட்டாயிரம் டவர்களும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ஃபிளாஷ் சேலின் (BSNL Flash Sale) கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஸ்பெஷல் திட்டம் ஆன ரூ.400-ஐ பொறுத்தவரை, இது 40 நாட்களுக்கு செல்லுபடியாகும்; இந்த திட்டத்தின் கீழ் 400ஜிபி அளவிலான ஹை-ஸ்பீட் 4ஜி டேட்டா கிடைக்கும். அதாவது ரூ.1 க்கு 1ஜிபி டேட்டா என்கிற கணக்கின் கீழ் 400 ஜிபி கிடைக்கும். ஆனால் இது ஜூலை 27 ஆம் தேதி வரை மட்டுமே ரீசாஜ் செய்ய கிடைக்கும்.

ரூ.400 திட்டத்தின் கீழ் வெறும் டேட்டா நன்மை மட்டுமே கிடைக்கும். அதாவது இது வாய்ஸ் காலிங் அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்காது. இருப்பினும் ரூ.400 திட்டத்தின் கீழ் கிடைக்கும் 400ஜிபி டேட்டாவை 40 நாட்களுக்கு முன்பே நீங்கள் பயன்படுத்தி விட்டீர்கள் என்றால் 400ஜிபிக்கு பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40கேபிபிஸ் ஆககுறைக்கப்படும். அதாவது இது அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 197 Recharge Plan Validity Reduced From 70 Days into 54 Days Benefits Also Revised
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X