BSNL போட்ட போடு.. ரூ.200 க்கு இறக்கிய BSNL.. 42 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 4 ஜிபி டேட்டா!
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுத்து வருகிறது. இதில் டெலிகாம் கஸ்டமர்களிடையே அதிக வரவேற்பு பெற்ற திட்டமாக பிஎஸ்என்எல் ரூ.197 திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரூ.200 விலைக்கும் மலிவாக இந்த திட்டம் கிடைக்கிறது. ஆனால், 42 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. இதே விலைக்கு ஜியோ மற்றும் ஏர்டெல்லில் திட்டங்கள் கிடையாது. ஏர்டெல்லில் ரூ.199 விலையில் திட்டம் இருக்கிறது. ஆனால், வேலிடிட்டி 28 நாட்களுக்கு மட்டுமே இருக்கும். ஜியோ நிறுவனத்தில் ரூ.189 திட்டம் இருக்கிறது. அதிலும் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ. 197 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs 197 Recharge Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா மட்டும் லம்ப்-சம் சலுகையில் கொடுக்கப்படும். அதேபோல வாய்ஸ் கால்கள் அன்லிமிடெட் சலுகையில் கிடைக்காது. எஸ்எம்எஸ் சலுகை வழக்கம்போக கிடைக்கும். ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 42 நாட்களுக்கும் மொத்தமாக 4 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும்.
இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. 300 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இருப்பினும், 300 நிமிடங்கள் முடிந்தாலும் சிம் ஆக்டிவ் சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. ஏனென்றால், எஸ்எம்எஸ் சலுகைகள் 42 நாட்களுக்கும் கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம்.
ஒருவேளை தினசரி டேட்டா சலுகை ரூ.200 விலைக்குள் வேண்டுமானால், மற்றொரு திட்டம் இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களை போலவே 28 நாட்கள் வேலிடிட்டியை மட்டுமே கொடுக்கும். ஆனால், அந்த நிறுவனங்களைவிட கூடுதல் டேட்டா சலுகையை கொடுக்கும். இந்த திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ. 199 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs 199 Recharge Plan): 28 நாட்கள் வேலிடிட்டியை மட்டுமே இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கும். இது முந்தைய திட்டத்தைவிட குறைவான வேலிடிட்டியாக இருக்கிறது. ஆனால், டேட்டாவில் அப்படி கிடையாது. முந்தைய திட்டத்தில் மொத்தமாகவே 4 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். ஆனால், இதில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.
ஆகவே, வேலிடிட்டி நாட்கள் முழுவதும் 56 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். மேலும், 2 ஜிபி டேட்டா முடிந்த அதே நாளில் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவையும் இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். வாய்ஸ் கால்களின் சலுகை நிமிடங்களுக்கு கிடையாது. அன்லிமிடெட் சலுகையில் கொடுக்கப்பட்டு உள்ளது. அன்லிமிடெட் லோக்கல் கால்களை செய்யலாம்.
மேலும், அன்லிமிடெட் எஸ்டிடி (Unlimited STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டம் கொடுத்துள்ளது. இதைவிட மலிவான விலைக்கு திட்டம் வேண்டுமானால், பிஎஸ்என்எல் ரூ. 153 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் சலுகைகளை பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ. 153 திட்ட விவரங்கள் (BSNL Rs 153 Plan Details): இதில் 24 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். 1 ஜிபி டேட்டா தினசரிக்கு கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களின் சலுகையும் இதற்கு கிடைக்கிறது. இந்த விலைக்கு தனியார் டெலிகாம் நிறுவனங்களில் திட்டங்கள் கிடையாது.


Click it and Unblock the Notifications








