BSNL ஆட்டம் வேற மாதிரி இருக்கு.. ரூ. 200 விலைக்குள் 70 நாள் நன்மையா? மக்களை கவர்ந்த திட்டத்தின் நன்மைகள் என்ன?
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இந்தியாவில் உள்ள அதன் அணைத்து வாடிக்கையாளர்களுக்கு வெறும் ரூ. 197 (BSNL prepaid plan under Rs 200) விலைக்குள் 70 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை (BSNL 70 days validity plan) வழங்கியுள்ளது. மிகவும் குறைந்த விலையில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (New BSNL prepaid recharge plan) தேடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் எப்படி பயனளிக்கும் என்பதை இங்கு பார்க்கலாம். பிஎஸ்என்எல் (BSNL) பயனர்களுக்கான மலிவு விலை திட்டத்தை பற்றிய விபரங்கள் இதோ.டுள்ளது.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்கள் விலை அதிகமாக இருக்கும் காரணத்தினால், மக்கள் இப்போது அரசு நடத்தும் நெட்வொர்க்கான பிஎஸ்என்எல் நிறுவனம் பக்கம் கூட்டம் கூட்டமாக மாறி வருகின்றனர். மலிவு விலையில் அதிக நன்மையை தேடி வரும் மக்களை ஏமாற்ற கூடாது என்பதற்காகவே பிஎஸ்என்எல் நிறுவனம் பல புதுமையான திட்டங்களை (unique BSNL plans) அறிமுகம் செய்துள்ளது.

BSNL ஆட்டம் வேற மாதிரி இருக்கு.. ரூ. 200 விலைக்குள் 70 நாள் நன்மையா?
அதில் ஒரு குறிப்பிடத்தக்க தனித்துவமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் என்றால், அது தான் பிஎஸ்என்எல் ரூ. 197 திட்டமாகும் (BSNL Rs 197 Plan). இந்த திட்டம் ரூ. 200 விலைக்குள் 2 மாதங்களுக்கு மேலான வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது. காரணம் இது வெறும் 197 ரூபாய் விலையில் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை (70 days validity) கொண்டுள்ளது.
இந்த திட்டம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை வழங்கினாலும், இதனுடன் கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினசரி டேட்டா நன்மை மற்றும் தினசரி எஸ்எம்என் நன்மைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கும் படி BSNL இத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மை கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ. 197 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 197 Prepaid Plan):
உங்களுக்கு முதல் 18 நாட்களுக்கு மட்டுமே (voice call for first 18 days) கிடைக்கும்படி BSNL இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளது. இந்த திட்டத்தின் விலைக்கேற்ற வேல்யூவை (BSNL value price pack) வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா (2GB data per day) நன்மையை வழங்குகிறது. இதுவும் முதல் 18 நாட்களுக்கு மட்டும் கிடைக்கும்.
இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா வரம்பிற்கு (2GB daily data) பிறகு, இணைய வேகம் 40Kbps ஆக குறைக்கப்பட்டு அன்லிமிடெட் டேட்டா (unlimited data) நன்மை வழங்கப்படும். இறுதியாக, இந்த திட்டத்துடன் முதல் 18 நாட்களுக்கு உங்களுக்கு 100 தினசரி எஸ்எம்எஸ் (SMS) நன்மையும் பயன்படுத்த கிடைக்கிறது.
70 நாட்களுக்கு SIM ஆக்டிவ்:
இருப்பினும், இந்த திட்டம் உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை (BSNL SIM card) 70 நாட்களுக்கு ஆக்டிவ் நிலையில் (BSNL SIM active for 70 days) வைத்திருக்க அனுமதிக்கிறது. இந்த 70 நாட்களில் உங்களுக்கு இலவச இன்கம்மிங் சேவை இணைப்பும் கிடைக்கிறது. அதிக செலவின்றி வெறும் 197 ரூபாயில் 70 நாட்கள் செல்லுபடி கிடைக்கும் திட்டம் பல பட்ஜெட் பிரியர்களை பயனளிக்கும்.


Click it and Unblock the Notifications








