Home
News

அடேங்கப்பா..70 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக நன்மைகளை வழங்கும் மலிவு விலை BSNL ப்ரீபெய்ட் திட்டம்.!

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒவ்வொரு திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக வேலிடிட்டி தரும் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல். ஆனாலும் தனியார் டெலிகாம் நிறுவனம் 5ஜி சேவையைக் கொண்டுவந்துவிட்டன. அதாவது இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஜியோ, ஏர்டெல் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டன.

கூடிய விரைவில் இந்தியா முழுவதும் இந்நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை 4ஜி சேவையை அறிமுகம் செய்யவில்லை. இருந்தபோதிலும் கூடிய விரைவில் பிஎஸ்எல்எல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 70 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் மலிவு விலை BSNL ப்ரீபெய்ட் திட்டம்.!

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டம் ஒன்று அதிக வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் தான் அருமையான நன்மைகளுடன் அதிக வேலிடிட்டி வழங்குகிறது. இப்போது பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்குத் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Zing Music உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. ஆனால் மேலே கூறிய நன்மைகள் 15 நாட்கள் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த திட்டம் 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.187 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், அழைப்பு நன்மைகள், இலவச PRBT உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

 70 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் மலிவு விலை BSNL ப்ரீபெய்ட் திட்டம்.!

பிஎஸ்என்எல் ரூ.228 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 40kbps ஆக குறையும். இதுதவிர Arena மொபைல் கேமிங் சேவையையும் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.239 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில்ரூ.10 டாக்டைம், தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும்.இதுதவிர கேமிங் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஒரு மாதம் வேலிடிட்டி உடன் இந்த ரூ.239 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 70 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் மலிவு விலை BSNL ப்ரீபெய்ட் திட்டம்.!

பிஎஸ்என்எல் ரூ.269 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், BSNL Tunes, Eros Now சேவைகள், ஹார்டி மொபைல் கேம்ஸ் சேவை, அரீனா மொபைல் கேமிங் சேவை, லோக்துன், ஜிங் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் ரூ.269 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 197 Prepaid plan offers more benefits with 70 days validity : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X