Home
News

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்: தினசரி 2ஜிபி டேட்டா.! வியக்கவைக்கும் வேலிடிட்டி?

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு குறிப்பிட்ட டேட்டாவை முழுவதுமாக பயன்படுத்திய பின்னர் 80 கே.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சலுகைகள் இந்த

மேலும் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இலவச குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்கள், 18 நாட்களுக்கு ஸிங் மியூசிக் பயன்பாட்டிற்கான அணுகல் உள்ளிட்ட பல சலுகைகள் இந்த அட்டகாசமான திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனாலும் இந்த திட்டத்தின் இலவசநன்மைகள் 18 நாட்களுக்குபயன்படும் என்று பிஎஸ்என்எல் கூறியுள்ளது

பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டம்

அதேபோல் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ரூ.108 ப்ரீபெய்ட் திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு தனசரி 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கிறது. மேலும் இந்த ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் நிறுவனம்

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு சில ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கியுள்ளது. அதன்படி ரூ.47 ரீசார்ஜ் கூப்பன், ரூ.109 பிளான் வவுச்சர், ரூ.998 மற்றும் ரூ.1098 ஸ்பெஷல் ரீசார்ஜ் போன்ற திட்டங்கள் இனிமேல் கிடைக்காது என்று தகவல் வெளிவந்துள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.365 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.365 ப்ரீபெய்ட் திட்டம்

மேலும் பிஎஸ்என்எல் ரூ.365 ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை உயரத்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.365 ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை இப்போது ரூ.397-ஆக உள்ளது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ், இலவச பெர்சனலைஸ் ரிங் பேக் டோன் அணுகல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

 வெளிவந்த தகவலின்படி, பைபர்

இதற்குமுன்பு வெளிவந்த தகவலின்படி, பைபர் இன்டர்நெட் சேவையான பாரத் ஃபைபரின் கீழ் சில திட்டங்களை நீக்கியுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிஎஸ்என்எல் நிறுவனம் ஃபைபர் பேசிக், ஃபைபர் வேல்யூ, ஃபைபர் பிரீமியம் மற்றும் ஃபைபர் அல்ட்ரா போன்ற திட்டங்களை அறிமுகம் செய்தது.

புதிய திட்டங்களும்

பின்பு பல்வேறு புதிய திட்டங்களும் சேர்க்கப்பட்டன. அதேபோல் பல திட்டங்களும் அகற்றப்பட்டன. பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் வாடிக்கையாளர்கள் இனிமேல் ஃபைபர் பேசிக் பிளஸ் மற்றும் ஃபைபர் பிரீமியம் பிளஸ் ஆகிய இரண்டு பிராட்பேண்ட் திட்டங்களை மட்டுமே தேர்வுசெய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஃபைபர் பேசிக் பிளஸ்

ஃபைபர் பேசிக் பிளஸ்

எனவே பயனர்கள் ஃபைபர் பேசிக் பிளஸ் திட்டத்தை தேர்வு செய்தால் மாதத்திற்கு ரூ.599 பணம் செலுத்த வேண்டும். மேலும் இந்த திட்டத்தின் சலுகைகளைப் வரிவிகாப் பார்ப்போம். ஃபைபர் பேசிக் பிளஸ் திட்டத்தில் 3.3TB அல்லது 3,300GB டேட்டாவை பெறமுடியும். பின்பு 60 Mbps வேகத்தில் இணையத்தை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் டேட்டா முழுவதையும் பயன்படுத்திய பின்னர் 2 Mbps வேகத்தின் கீழ் இணைய சேவையை தொடர்ந்து அனுபவிக்கலாம். இதுதவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஃபைபர் பிரீமியம் பிளஸ்

ஃபைபர் பிரீமியம் பிளஸ்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஃபைபர் பிரீமியம் பிளஸ் பிராட்பேண்ட் திட்டத்தை தேர்வு செய்தால் ரூ.1,277 பணம் செலுத்த வேண்டும். பின்பு இந்த திட்டத்தின் நன்மை என்னவென்றால், 3.3TB அல்லது 3,300GB டேட்டவை பெறமுடியும். பின்பு 200 Mbps வேகத்தில் இணையத்தை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் டேட்டா முழுவதையும் பயன்படுத்திய பின்னர் கூட 15 Mbps வேகத்தின் கீழ் இணைய சேவையை தொடர்ந்து அனுபவிக்கலாம்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 197 prepaid plan introduced: What are the benefits?: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X