BSNL-க்கு கியூ கட்டுது கூட்டம்.. ரூ.197-க்கு வருது 70 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படியான விலையில் திட்டங்களை கொடுத்து வரும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், இப்போது வெறும் ரூ.197 விலையிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் 70 நாட்களுக்கு வேலிடிட்டியை கொடுத்து இருக்கிறது. மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் சிம் ஆக்டிவ் திட்டமாக (SIM Active Plan) இது இருக்கிறது. இந்த திட்டத்தின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
டெலிகாம் நிறுவனங்கள் சிம் ஆக்டிவாக வைத்திருக்கவே கட்டணங்களை வசூலிக்கின்றன. முன்பெல்லாம், இது இலவசமாக கிடைத்தது. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனமானது, மற்ற நிறுவனங்கள் நினைத்திராத மலிவு விலைக்கு சிம் ஆக்டிவ் திட்டங்களை (Cheapest SIM Active Plan) வைத்திருக்கிறது. மத்திய அரசின் கீழ் செயல்படுவதால், இவ்வளவு மலிவான விலைக்கு கொடுக்க முடிகிறது.

பிஎஸ்என்எல் ரூ 197 திட்ட விவரங்கள் (BSNL Rs 197 Plan Details): இந்த திட்டம் முழுக்க முழுக்க சிம் ஆக்டிவ் சலுகைக்காகவே கிடைப்பதால், 70 நாட்களுக்கு வேலிடிட்டியை கொடுக்கிறது. ஆகவே, 2 மாதங்களுக்கும் மேல் தொடர்ந்து சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்கலாம். இந்த விலை ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களில் சாத்தியமே கிடையாது.
வெறும் சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை இந்த திட்டம் கொண்டிருக்கிறது. அதாவது, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்கள் (National Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது.
நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, 30 ஜிபி டேட்டாவை மொத்தமாக பெற்று கொள்ள முடியும். மேலும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. மேற்கூறிய வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகை மூன்றும் முதல் 15 நாட்களுக்கு மட்டுமே கிடைக்க கூடியது. இதற்கு பிறகு சிம் ஆக்டிவ் வேலிடிட்டி மட்டுமே தொடர்ந்து இருக்கும்.
ஆகவே, முதல் 15 நாட்களுக்கு சலுகைகளை பெற்று கொள்ளலாம். இதேபோல 150 நாட்களுக்கு திட்டம் வேண்டுமானால், ரூ 397 மதிப்பிலான சிம் ஆக்டிவ் திட்டத்துக்கு பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் செல்லலாம். இந்த திட்டத்திலும் அதிகப்படியான வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ 397 திட்ட விவரங்கள் (BSNL Rs 397 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 150 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 5 மாதங்களுக்கு மலிவான விலையில் சிம் ஆக்டிவ் சலுகை கிடைக்கிறது. முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை இதற்கும் கொடுக்கப்படுகிறது.
மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. மொத்தமாக 60 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல 100 எஸ்எம்எஸ்களை நாள்தோறும் அனுப்பி கொள்ளலாம். இந்த மூன்று சலுகைகளும் முதல் 30 நாட்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு சிம் ஆக்டிவ் தொடர்ந்து இருக்கும்.
இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களும் முழுக்க முழுக்க சிம் ஆக்டிவுக்காக மட்டுமே கிடைக்கின்றன. ஆகவே, சலுகைகள் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன. இருப்பினும், இந்த விலைக்கு மிகவும் நல்ல சலுகைகளே கொண்டிருக்கின்றன. ஜியோ அல்லது ஏர்டெல்லில் 150 நாட்களுக்கு சிம் ஆக்டிவாக வைத்திருக்க வேண்டுமானால், கிட்டத்தட்ட ரூ.1000 செலவாகும்.


Click it and Unblock the Notifications








