BSNL தலைவா நீ கிரேட்.. ரூ.200 கூட இல்லை.. புது 70 நாள் வேலிடிட்டி பிளான்.. என்னென்ன நன்மைனு உடனே பாருங்க..
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இந்தியாவில் உள்ள அதன் அணைத்து வாடிக்கையாளர்களுக்கு ரூ.200 (BSNL prepaid plan under Rs 200) விலைக்குள் 70 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (BSNL 70 days validity plan) உடன் கூடிய புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (New BSNL prepaid recharge plan) அறிமுகம் செய்தள்ளது. இதுவரை எந்தவொரு இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமும் (Indian telecom companies) வழங்கிடாத வகையில், இந்த புதிய திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகளை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மிகவும் சாமர்த்தியமாக கையாண்டுள்ளது.
பிஎஸ்என்எல் (BSNL) இந்திய தொலைத்தொடர்பு துறையில் (Indian Telecommunication Sector) நடைபெறும் கொடுமையான போட்டிக்கு நடுவே நிலைத்து நிற்க போராடிய அந்த காலம் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது மக்களே. இப்போது இந்தியாவில் கெத்தான மொபைல் நெட்வொர்க் (mobile network) என்றாலே அது பிஎஸ்என்எல் தான் என்று கூறும் அளவிற்கு BSNL இப்போது மலையளவு முன்னேறி வளர்ந்துள்ளது. இந்தியாவில் அணைத்து தரப்பு மக்களும் நம்பும் ஒரு நெட்வொர்க்காக BSNL இப்போது உருமாறியுள்ளது.

BSNL தலைவா நீ கிரேட்.. ரூ.200 கூட இல்லை.. புது 70 நாள் வேலிடிட்டி பிளான்:
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்கள் விலை அதிகமாக இருக்கும் காரணத்தினால், மக்கள் இப்போது அரசு நடத்தும் நெட்வொர்க்கான பிஎஸ்என்எல் நிறுவனம் பக்கம் படையெடுத்து வருகின்றனர். மலிவு விலையில் அதிக நன்மையை தேடி வரும் மக்களை ஏமாற்ற கூடாது என்பதற்காகவே பிஎஸ்என்எல் நிறுவனம் பல புதுமையான திட்டங்களை (unique BSNL plans) அறிமுகம் செய்துள்ளது.
அதில் ஒரு குறிப்பிடத்தக்க ஈர்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய புது பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (BSNL prepaid recharge plan) தான் இந்த பிஎஸ்என்எல் ரூ. 197 திட்டம் (BSNL Rs 197 Plan). இந்த திட்டம் ரூ. 200 விலைக்குள் நீண்ட நாள் வேலிடிட்டி உடன் (best validity plan under Rs 200) ஒரு சிறப்பான திட்டத்தை தேடும் மொபைல் பயனர்களுக்கு (mobile phone users) சிறந்த தேர்வாக அமைகிறது.
பிஎஸ்என்எல் ரூ. 197 திட்டம் (BSNL Rs 197 Plan):
காரணம் இது வெறும் 197 ரூபாய் விலையில் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை (70 days validity) கொண்டுள்ளது. இந்த திட்டம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை வழங்கினாலும், இதனுடன் கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினசரி டேட்டா நன்மை மற்றும் தினசரி எஸ்எம்என் நன்மைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கும் படி BSNL இத்திட்டத்தை வடிவமைத்துள்ளது.
இன்னும் புரியும் படி தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், பிஎஸ்என்எல் 197 பிளான் (BSNL 197 Plan) அணைத்து நெட்வொர்க்கிற்கும் செல்லுபடியாகும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. ஆனால், இந்த அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மை உங்களுக்கு முதல் 18 நாட்களுக்கு மட்டுமே (voice call for first 18 days) கிடைக்கும்படி BSNL இந்த திட்டத்தை டிசைன் செய்துள்ளது. இது இந்த திட்டத்தின் விலைக்கேற்ற வேல்யூவை (BSNL value price pack) வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
முதல் 18 நாட்களுக்கு டேட்டா, வாய்ஸ், SMS நன்மை.. 70 நாட்களுக்கு என்ன நன்மை?
அதேபோல், இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா (2GB data per day) நன்மையை வழங்குகிறது. இதுவும் முதல் 18 நாட்களுக்கு மட்டும் கிடைக்கும். தினசரி 2GB டேட்டா வரம்பிற்கு (2GB daily data) பிறகு, இணைய வேகம் 40Kbps ஆக குறைக்கப்பட்டு அன்லிமிடெட் டேட்டா (unlimited data) நன்மை வழங்கப்படும். இறுதியாக, இந்த திட்டத்துடன் முதல் 18 நாட்களுக்கு உங்களுக்கு 100 தினசரி எஸ்எம்எஸ் (SMS) நன்மையும் பயன்படுத்த கிடைக்கிறது.
இருப்பினும், இந்த திட்டம் உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை (BSNL SIM card) 70 நாட்களுக்கு ஆக்டிவ் நிலையில் (BSNL SIM active for 70 days) வைத்திருக்க அனுமதிக்கிறது. இந்த 70 நாட்களில் உங்களுக்கு இலவச இன்கம்மிங் சேவை இணைப்பும் கிடைக்கிறது. அதிக செலவின்றி வெறும் 197 ரூபாயில் 70 நாட்கள் செல்லுபடி கிடைக்கிறது என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். 18 நாட்கள் கிடைக்கும் நன்மைக்கு பிறகு, கூடுதல் வாய்ஸ் மற்றும் டேட்டா நன்மைகளுக்கு நீங்கள் தனியாக வவுச்சர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








