இப்படி இருக்கணும் ரீசார்ஜ்.. BSNL-க்கு ரூ.197 போதும்.. 48 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. 4 ஜிபி டேட்டா!
பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட மலிவான விலைக்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) கிடைக்கின்றன. அதிலும், வேலிடிட்டியும் மற்ற நிறுவனங்களைவிட அதிகமாகவே கொடுக்கப்படுகிறது. இதில் பிஎஸ்என்எல் ரூ.197 திட்டத்தில் 48 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அந்த நாட்களில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் 4 ஜிபி டேட்டா சலுகையை கொடுக்கிறது. இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 197 திட்ட விவரங்கள் (BSNL Rs 197 Plan Details): மற்ற நிறுவனங்கள் 28 நாட்கள், 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களுக்கு விதிக்கும் விலையில் பிஎஸ்என்எல் நிறுவனமானது, 48 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. மலிவு விலைக்கு கிடைப்பதால், இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மட்டும் கிடைக்காது. 300 நிமிடங்களுக்கு கொடுக்கப்படும்.

இந்த நிமிடங்களுக்கு லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். டேட்டாவை பார்க்கையில், 48 நாட்கள் வேலிடிட்டிக்கும் மொத்தமாக 4 ஜிபி கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு வழக்கமாக கிடைக்கும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) இதில் கொடுக்கப்படவில்லை.
இந்த திட்டத்துக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இந்த சலுகைகளை 48 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதற்கு ஏற்ப விலையும் இருக்கிறது. ஆகவே, செகண்டரி சிம் கார்டாக அவை இருந்தால், சிம் ஆக்டிவை மலிவான விலைக்கு பெற்று கொள்ள முடியாது.
ஆனால், பிஎஸ்என்எல்லில் மலிவான விலைக்கு சிம் ஆக்டிவ் பெற்று கொள்ள முடிகிறது. அதேபோல போதுமான வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சலுகைகளும் அதில் கிடைக்கின்றன. இப்படிப்பட்ட ரீசார்ஜ் வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் வேண்டுமானால், அடுத்த திட்டம் சரியாக இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ 199 திட்ட விவரங்கள் (BSNL Rs 199 Plan Details): இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. இதற்கு ஏற்ப வேலிடிட்டி கிடைக்கிறது. அதாவது, முந்தைய திட்டத்தில் 48 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைத்தது, ஆனால் இதில் 28 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும்.
ஆனால், சலுகைகள் பட்டையை கிளப்பும்படி இருக்கின்றன. இதில் கிடைக்கும் 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும். அதேபோல நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
எஸ்எம்எஸ் சலுகைகளை பார்க்கையில், நாளொன்றுக்கு 100 கிடைக்கிறது. இந்த ரூ.199 விலைக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கும் திட்டமும் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவில் கிடையாது. இந்த திட்டங்களை 4ஜி சேவையில் பயன்படுத்தி கொள்ளலாம். பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் இப்போது பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கிறது.
இதனால், முன்புபோல டேட்டா இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படாது. 4ஜி வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். அதே நேரத்தில் மலிவான விலைக்கு 4ஜி திட்டங்களையும் பெற்று கொள்ளலாம். இதேபோல பல்வேறு திட்டங்கள் மூலமாக பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய கஸ்டமர்களை அதன் பக்கம் சாய்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications








