Home
News

BSNL SIM-க்கு சல்யூட்.. இனி ரூ.197 போதும்.. 35 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 5 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களில் கிடைக்காத விலைக்கு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) கிடைக்கின்றன. இதில் 35 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ரீபெய்ட் திட்டமானது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மட்டுமே இப்போது நிமிட கணக்கில் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படுகின்றன. மற்ற நிறுவனங்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கின்றன. இருப்பினும், சிம் ஆக்டிவ் மற்றும் மலிவான விலைக்கு பிஎஸ்என்எல் திட்டங்களை வைத்திருப்பதால், கஸ்டமர்களிடையே வரவேற்பை பெற்றுவிடுகின்றன.

BSNL SIM-க்கு சல்யூட்.. இனி ரூ.197 போதும்.. 35 நாட்கள் வேலிடிட்டி!

அந்த வகையில், 300 நிமிடங்கள் மட்டுமே வாய்ஸ் கால்களை கொடுக்கும் திட்டமாக பிஎஸ்என்எல் ரூ.197 திட்டம் கிடைக்கிறது. இதுபோக லம்ப்-சம் டேட்டா மற்றும் லம்ப்-சம் எஸ்எம்எஸ் சலுகைகளையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. கூடுதலாக போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.197 திட்ட விவரங்கள் (BSNL Rs 197 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 35 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த நாட்களில் 300 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால்களை (Voice Calls) செய்து கொள்ளலாம். இது லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களுக்கும் பொருந்தும்.

இந்த வாய்ஸ் கால்களின் சலுகைகள் போக 5 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படும். இந்த டேட்டாவை முழுவதும் பயன்படுத்திய பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படும். மேலும், 100 எஸ்எம்எஸ்களையும் இந்த திட்டத்தின் வழியாக செய்து கொள்ள முடியும். இந்த சலுகைகளை மட்டுமே கொடுக்கிறது.

இந்த திட்டத்தைவிட ரூ.2 கூடுதலாக செலுத்தி பிஎஸ்என்எல் ரூ.199 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தினசரிக்கு டேட்டா (Daily Data) மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கொடுக்கப்படும். அதேபோல போஸ்ட் டேட்டா கிடைக்கும். கூடுதலாக தினசரிக்கு எஸ்எம்எஸ் சலுகைகளை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ.199 திட்ட விவரங்கள் (BSNL Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இது முந்தைய திட்டத்தைவிட 7 நாட்கள் குறைவான வேலிடிட்டியாக இருக்கிறது. ஆனால், டேட்டா சலுகையில் பட்டையை கிளப்பி இருக்கிறது. அதாவது, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.

28 நாட்களில் மொத்தமாக 56 ஜிபி டேட்டாவை பெறலாம். இது முந்தைய திட்டத்தைவிட 51 ஜிபி அதிகமாக இருக்கிறது. மேலும், 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். வாய்ஸ் கால்களில் முந்தைய திட்டத்தில் நிமிடங்களுக்கு மட்டுமே சலுகை கிடைத்தது. ஆனால், இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வருகிறது.

ஆகவே, 28 நாட்கள் முழுவதும் நிமிட கணக்கில்லாமல், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். முந்தைய திட்டத்தில் 35 நாட்களுக்கும் சேர்த்தே 100 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால், இதில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைத்தது. சிம் ஆக்டிவுக்கு முந்தைய திட்டம், அதிக டேட்டாவுக்கு இந்த திட்டம் சரியாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 197 Plan With 300 Min Voice Calls 5GB Data 35 Days Validity Check Prepaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X